Skip to content

Popular

April 1 புதன்

On this day · April 1

வரலாற்றில் ஏப்பிரல் 1

ஏப்பிரல் 1 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 18 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 4

ஏப்பிரல் 1 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 35

3ஆம் நூற்றாண்டு

  1. 286

    உரோமைப் பேரரசர் தியோக்கிளேத்தியான் தனது தளபதி மாக்சிமியனை துணைப் பேரரராக அறிவித்து, உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக நியமித்தார்.

4ஆம் நூற்றாண்டு

  1. 325

    இளவரசர் சின் செங்தி தனது 4-வது அகவையில், சீனாவின் கிழக்கு யின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1545

    பொலிவியாவில் பெருமளவு வெள்ளிப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பட்டோசி என்ற நகரம் அமைக்கப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1625

    இடச்சு-போர்த்துக்கீசப் போர்: 52 எசுப்பானிய, போர்த்துக்கீசக் கப்பல்கள் பாகியா நகரை மீண்டும் கைப்பற்றப் போரில் இறங்கின.

19ஆம் நூற்றாண்டு

  1. 1826

    சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.

  2. 1867

    சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாகியது.

  3. 1873

    அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் மூழ்கியதில் 547 உயிரிழந்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1924

    இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இட்லருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் ஒன்பது மாதங்களில் அவர் விடுதலையானார்.

  2. 1933

    செருமனியில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்சிகள் யூத வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு ஒரு-நாள் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

  3. 1933

    ஆங்கிலேய துடுப்பாட்ட வீரர் வால்ட்டர் அமொண்ட் 336 நியூசிலாந்துக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 336 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.

  4. 1935

    இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

  5. 1937

    ஏடன் பிரித்தானியாவின் குடியேற்ற நாடானது.

  6. 1939

    எசுப்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக இராணுவத் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோ அறிவித்தார். கடைசி குடியரசுப் படையினர் சரணடைந்தனர்.

  7. 1941

    ஈராக்கில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அப்தல்லாவின் அரசு கலைக்கப்பட்டது.

  8. 1944

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா தவறுதலாக சுவிட்சர்லாந்தின் சாபாசான் நகர் மீது குண்டுகளை வீசியது.

  9. 1945

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் சப்பானின் ஒக்கினாவா தீவுகளில் இறங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர்.

  10. 1946

    அலூசியன் தீவுகளில் நிகழ்ந்த 8.6 அளவு நிலநடுக்கம் காரணமாக அவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் உயிரிழந்தனர்.

  11. 1948

    பரோயே தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.

  12. 1949

    சீன உள்நாட்டுப் போர்: மூன்றாண்டுகள் சண்டையின் பின்னர், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தேசியவாதக் கட்சியுடன் நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.

  13. 1955

    சைப்பிரசில் கிரேக்கத்துடன் இணையும் நோக்கோடு பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

  14. 1957

    இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

  15. 1958

    இலங்கை இனக்கலவரம், 1958: கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன.

  16. 1960

    டிரோசு-1 என்ற செயற்கைக்கோள் முதலாவது விண்வெளியில் இருந்து முதலாவது தொலைக்காட்சிப் படிமத்தை பூமிக்கு அனுப்பியது.

  17. 1970

    அமெரிக்காவில் தொலைக்காட்சி, வானொலிகளில் 1971 சனவரி 1 முதல் புகைத்தலுக்கான விளம்பரங்களைத் தடை செய்யும் சட்டத்தை அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.

  18. 1971

    வங்காளதேச விடுதலைப் போர்: வங்காளதேசத்தில் பாக்கித்தான் இராணுவம் 1,000 பொதுமக்களைப் படுகொலை செய்தது.

  19. 1973

    புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.

  20. 1976

    ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

  21. 1979

    ஈரான் 99% மக்களின் ஆதரவான வாக்களிப்பின் மூலம் ஓர் இசுலாமியக் குடியரசாகியது. ஷாவில் அரசு முடிவுக்கு வந்தது.

  22. 1981

    சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

  23. 1997

    ஏல்-பாப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.

  24. 1999

    நூனவுட் கனடாவின் பிராந்தியமானது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    போர்க்குற்றங்களுக்காகத் தேடப்பட்டுவந்த யூகொசுலாவியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சுலோபதான் மிலோசெவிச் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.

  2. 2001

    நெதர்லாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.

  3. 2004

    கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

  4. 2006

    ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 8

இம்மாத நாட்கள் · ஏப்பிரல்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.