Skip to content

Popular

March 31 செவ்வாய்

On this day · March 31

வரலாற்றில் மார்ச்சு 31

மார்ச்சு 31 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 18 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2

மார்ச்சு 31 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

4ஆம் நூற்றாண்டு

  1. 307

    உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம் புரிந்தார்.

7ஆம் நூற்றாண்டு

  1. 627

    அகழ்ப்போர்: முகம்மது நபி மதீனா (சவூதி அரேபியா) மீதான மக்காப் படையினரின் 14-நாள் முற்றுகையை எதிர்கொண்டார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1492

    எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1774

    அமெரிக்கப் புரட்சிப் போர்: மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் துறைமுகத்தை மூடுமாறு பிரித்தானியா உத்தரவிட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1822

    கிரேக்கத் தீவான கியோசில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்க அங்குள்ள மக்களை உதுமானிய இராணுவம் படுகொலை செய்தது.

  2. 1866

    சிலியின் வல்பரைசோ துறைமுகம் எசுப்பானியக் கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.

  3. 1885

    இலங்கையில் தமிழ், சிங்கள, இசுலாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டன.

  4. 1889

    ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

  5. 1899

    முதலாவது பிலிப்பீன் குடியரசின் தலைநகர் மாலோலோசு அமெரிக்கப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1909

    பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் ஆளுமையை செர்பியா ஏற்றுக் கொண்டது.

  2. 1917

    ஐக்கிய அமெரிக்கா டானிசு மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.

  3. 1918

    ஏறத்தாழ 12,000 முசுலிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.

  4. 1918

    ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

  5. 1930

    திரைப்படங்களில் பாலியல், குற்றங்கள், சமயம், வன்முறை நிகழ்வுகளைக் காண்பிப்பதற்கான குறியீடுகள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

  6. 1931

    நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

  7. 1931

    அமெரிக்காவின் டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599 கேன்சஸ் மாநிலத்தில் விபத்துக்குளாகியதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

  8. 1942

    இரண்டாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தீவை சப்பான் பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.

  9. 1945

    இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனி வானோடி ஒருவர் செருமனியில் இருந்து வெளியேறி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 என்ற உலகின் முதலாவது ஜெட் போர் விமானத்தை அமெரிக்காவுக்குக் கையளித்தார்.

  10. 1949

    நியூபவுன்லாந்து கனடியக் கூட்டமைப்பில் 10வது மாநிலமாக இணைந்தது.

  11. 1951

    அமெரிக்கவின் யூனிவாக் 1 என்ற முதலாவது வணிகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.

  12. 1959

    திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் புகலிட உரிமை கோரினார்.

  13. 1964

    பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு காஸ்டெலோ பிராங்கோ தலைமையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

  14. 1966

    சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.

  15. 1970

    12 ஆண்டுகள் விண்வெளியில் களித்த எக்ஸ்புளோரர் 1 விண்கலம் புவியின் வளிமண்டலத்துள் வந்தது.

  16. 1990

    இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.

  17. 1991

    ஜோர்ஜியாவில் 99 விழுக்காடு வாக்காளர்கள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

  18. 1995

    உருமேனியாவில் ஏ310 வானூர்தி வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 60 பேரும் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    ஈராக் போர்: ஈராக்கின் பலூஜா நகரில் நான்கு அமெரிக்க தனியார் போர்ப்படையினர் கொல்லப்பட்டனர்.

  2. 2007

    முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 31 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.