Skip to content

Popular

March 15 ஞாயிறு

On this day · March 15

வரலாற்றில் மார்ச்சு 15

மார்ச்சு 15 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 23 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 5

மார்ச்சு 15 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 34

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 44

    உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

4ஆம் நூற்றாண்டு

  1. 351

    இரண்டாம் கான்ஸ்டன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர் பட்டம் அளித்து, உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான்.

10ஆம் நூற்றாண்டு

  1. 933

    பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1493

    கொலம்பசு அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியா திரும்பினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1564

    முகலாயப் பேரசர் அக்பர் "ஜிஸ்யா" எனப்படும் தலைவரியை நீக்கினார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1776

    தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1802

    இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

  2. 1815

    நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.

  3. 1819

    பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.

  4. 1820

    மேய்ன் ஐக்கிய அமெரிக்காவின் 23வது மாநிலமாக இணைந்தது.

  5. 1827

    ரொறன்ரோ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

  6. 1848

    அங்கேரியில் புரட்சி வெடித்தது. ஆப்சுபேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

  7. 1874

    பிரான்சுக்கும் வியட்நாமிற்கும் இடையில் சாய்கோன் உடன்பாடு எட்டப்பட்டது. கோச்சின்சீனா மீதான பிரான்சின் முழுமையான அரசுரிமை அங்கீகரிக்கப்பட்டது.

  8. 1877

    முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.

  9. 1888

    ஆங்கிலோ-திபெத்தியப் போர் ஆரம்பமானது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1917

    உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.

  2. 1921

    உதுமானியப் பேரரசின் முன்னாள் பிரதமரும், ஆர்மீனிய இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான தலாத் பாசா பெர்லினில் ஆர்மீனியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

  3. 1922

    எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் புவாட் எகிப்தின் மன்னனானார்.

  4. 1931

    வைக்கிங்கு என்ற கப்பல் நியூபவுன்லாந்து அருகே வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.

  5. 1943

    இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் உக்ரேனின் கார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.

  6. 1951

    ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.

  7. 1952

    ரீயூனியன், சிலாவோசு நகரில் 24 மணி நேரத்தில் 1870 மிமீ மழைவீழ்ச்சி பதியப்பட்டது. இது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.

  8. 1961

    தென்னாப்பிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.

  9. 1970

    எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி சப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.

  10. 1978

    சோமாலியா, எத்தியோப்பியாவிற்கிடையேயான போர் முடிவுக்கு வந்தது.

  11. 1985

    உலகின் முதலாவது இணைய ஆள்களப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

  12. 1986

    சிங்கப்பூரில் நியூ வேர்ல்ட் என்ற உணவு விடுதி இடிந்து வீழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.

  13. 1990

    மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராகத் தெரிவானார்.

  14. 1991

    பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமனி முழுமையான விடுதலையைப் பெற்றது.

  15. 1995

    இலங்கைத் துடுப்பாட்ட அணி முதல் தடவையாக வெளிநாடு ஒன்றில் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வென்றது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.

  2. 2007

    இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

  3. 2008

    அல்பேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர்.

  4. 2011

    சிரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

பிறப்புகள்

Births · 23

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.