Skip to content

Popular

March 5 வியாழன்

On this day · March 5

வரலாற்றில் மார்ச்சு 5

மார்ச்சு 5 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 14 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 1

மார்ச்சு 5 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

4ஆம் நூற்றாண்டு

  1. 363

    உரோமைப் பேரரசர் யூலியன் அந்தியோக்கியாவில் இருந்து 90,000 படையினருடன் சாசானியரைத் தாக்கப் புறப்பட்டான். இப்போரில் யூலியன் இறந்தான்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1496

    இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1616

    73 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிக்கோலாசு கோப்பர்னிக்கசின் பரலோகக் கோளங்களின் சுழற்சி என்ற நூல் தடைசெய்யப்பட்ட ஆவணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் அறிவிக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1770

    பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்கப் புரட்சிப் போர் வெடிக்கக் காரணமானது.

  2. 1793

    பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1824

    முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியா அதிகாரபூர்வமாக பர்மா மீது போர் தொடுத்தது.

  2. 1836

    சாமுவேல் கோல்ட் 34-கேலிபர் சுழல் கைத்துப்பாக்கிக்கான காப்புரிமம் பெற்றார்.

  3. 1857

    கொழும்பு கோட்டையில் தற்போதும் இயங்கும் கொழும்பு பழைய கலங்கரை விளக்கம் கட்டி முடிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1906

    மோரோ கிளர்ச்சி: அமெரிக்க இராணுவம் பழங்குடி மோரோ மகளின் கிளர்ச்சியை அடக்க பெருமளவு படையினரை புட் டாஜோ பகுதியில் குவித்தது. இத்தாக்குதல்களில் ஆறு பழங்குடியினர் மட்டுமே உயிர் தப்பினர்.

  2. 1912

    இத்தாலிய-துருக்கியப் போர்: இத்தாலியப் படையினரே முதன் முதலாக வான்கப்பல்களை படைத்துறைத் தேவைக்காகப் பயன்படுத்தினர்.

  3. 1931

    பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு: காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  4. 1933

    பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடி, அவற்றின் நிதிப் பரிமாற்றங்களைத் தடை செய்தார்.

  5. 1933

    செருமானியத் தேர்தலில் இட்லரின் நாட்சி கட்சி 43.9% வாக்குகளைப் பெற்றது.

  6. 1940

    காத்தின் படுகொலைகள்: யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 14,700 போலந்து போர்க்கைதிகள் உட்பட 25,700 போலந்து மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.

  7. 1942

    இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் இடச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் தலைநகரான பத்தேவியாவைக் கைப்பற்றினர்.

  8. 1946

    பனிப்போர்: வின்ஸ்டன் சர்ச்சில் மிசோரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது "இரும்புத் திரை" என்ற பதத்தைப் பயன்படுத்தினார்.

  9. 1953

    சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மாஸ்கோவில் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.

  10. 1960

    இந்தோனேசிய அரசுத்தலைவர் சுகர்ணோ 1955 ஆ ஆண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து, தானே தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்ட புதிய நாடாளுமன்றத்தை அறிவித்தார்.

  11. 1964

    இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.

  12. 1965

    பகுரைனில் பிரித்தானியக் குடியேற்றவாதிகளுக்கு எதிரான இடதுசாரிக் கிளர்ச்சி இடம்பெற்றது.

  13. 1970

    அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் 43 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்தது.

  14. 1974

    யோம் கிப்பூர்ப் போர்: இசுரேலியப் படையினர் சூயசு கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து பின்வாங்கினர்.

  15. 1979

    சோவியத் விண்கலங்கள் வெனேரா 11, வெனேரா 12, மற்றும் செருமனிய-அமெரிக்க விண்கலம் ஈலியோசு II ஆகியவற்றை காமா கதிர் வெடிப்பு தாக்கியது.

  16. 1981

    ZX81 என்ற பிரித்தானிய வீட்டுக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் 1.5 மில்லியன் கணினிகள் விற்பனை செய்யப்பட்டன.

  17. 1982

    சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.

  18. 1998

    இலங்கை தலைநகர் கொழும்பில் மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பேருந்துக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் வரை கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    கைஃபா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 இசுரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

  2. 2008

    இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.

  3. 2012

    மடகாசுகரை இரீனா என்ற வெப்பவலயச் சூறாவளி தாக்கியதில் 75 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.