Skip to content

Popular

March 13 வெள்ளி

On this day · March 13

வரலாற்றில் மார்ச்சு 13

மார்ச்சு 13 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 7 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 1

மார்ச்சு 13 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 34

7ஆம் நூற்றாண்டு

  1. 624

    பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குறைசிகளுக்கும் இடையில் ஹெஜாஸ் பகுதியில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

12ஆம் நூற்றாண்டு

  1. 1138

    கர்தினால் கிரெகோரியோ கோண்டி எதிர்-திருத்தந்தையாக ஆறாம் விக்டர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1567

    எண்பதாண்டுப் போர் ஆரம்பமானது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1639

    ஆர்வர்டு கல்லூரிக்கு சமயவாதி யோன் ஆர்வர்டு என்பவரின் பெயர் இடப்பட்டது.

  2. 1640

    இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

  3. 1697

    கடைசி மாயா பேரரசின் தலைநகரம் நோச்பெட்டென் எசுபானிய தேடல் வெற்றி வீரர்களிடம் வீழ்ந்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1781

    வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1809

    சுவீடன் மன்னர் நான்காம் குசுத்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியில் பதவியிழந்தார்.

  2. 1865

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆப்பிரிக்க அமெரிக்கப் படையினரைப் பயன்படுத்த இணங்கியது.

  3. 1881

    உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் அவரது அரண்மனைக்கு அருகே நடந்த குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். (யூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).

  4. 1884

    எகிப்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கர்த்தூம் நகர் மீதான சூடான் மகுதிய இயக்கத்தின் முற்றுகை ஆரம்பமானது.

  5. 1900

    இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகள் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் புளும்பொன்டின் நகரைக் கைப்பற்றினர்.

  6. 1900

    பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1908

    நெல்லைக்கு வந்த வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.

  2. 1921

    மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

  3. 1930

    புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஆர்வர்டு கல்லூரி வான்காணகத்திற்கு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.

  4. 1933

    பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அறிவித்த கட்டாய 3-நாள் "வங்கி விடுமுறை" முடிவடைந்து அமெரிக்க வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

  5. 1940

    இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து பஞ்சாப் முன்னாள் துணைநிலை ஆளுநர் மைக்கேல் ஒ'டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.

  6. 1940

    உருசிய-பின்லாந்து குளிர்காலப் போர் முடிவுக்கு வந்தது.

  7. 1943

    பெரும் இன அழிப்பு: செருமனியப் படையினர் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.

  8. 1954

    முதலாம் இந்தோசீனப் போர்: வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.

  9. 1957

    கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவைக் கொல்ல மாணவப் புரட்சிவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

  10. 1969

    அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.

  11. 1979

    கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  12. 1988

    உலகின் மிக நீளமான கடலடிச் சுரங்கம், செய்க்கான் சுரங்கம், சப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.

  13. 1992

    கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.

  14. 1996

    இசுக்காட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

  15. 1997

    இந்தியாவின் பிறரன்பின் பணியாளர்கள் சபை அதன் தலைவர் அன்னை தெரேசாவின் இடத்துக்கு நிர்மலா ஜோஷியைத் தேர்ந்தெடுத்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.

  2. 2007

    2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது.

  3. 2008

    தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சிற்கு $1,000 ஐத் தாண்டியது.

  4. 2012

    சுவிட்சர்லாந்தில் சுரங்கம் ஒன்றில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

  5. 2013

    திருத்தந்தை பிரான்சிசு 266-வது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  6. 2016

    அங்காராவின் மத்திய பகுதியில், குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதில், 37 பேர் கொல்லப்பட்டனர், 127 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 7

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.