Skip to content

Popular

March 16 திங்கள்

On this day · March 16

வரலாற்றில் மார்ச்சு 16

மார்ச்சு 16 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 23 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 1

மார்ச்சு 16 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 597

    பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார்.

5ஆம் நூற்றாண்டு

  1. 455

    பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1190

    சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1521

    பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சில் ஒமோனொம் தீவை அடைந்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1660

    இங்கிலாந்தில் லோங் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1782

    அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் ரோட்டான் என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றின.

  2. 1792

    சுவீடன் மன்னர் மூன்றாம் குசுத்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1815

    இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.

  2. 1865

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அவராசுபரோ சமர் ஆரம்பமானது. இஒதில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் பெரும் இழப்பைச் சந்தித்தன.

  3. 1898

    மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1917

    முதலாம் உலகப் போர்: செருமனியின் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியது.

  2. 1925

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் வரை உயிரிழந்தனர்.

  3. 1926

    முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.

  4. 1935

    வெர்சாய் ஒப்பந்தத்தை மீறும் வகையில் எதிராக செருமனி மீண்டும் புதுப்படைக்கலன்கள் தயாரிப்பதில் ஈடுபட வேண்டும் என இட்லர் உத்தரவிட்டார்.

  5. 1939

    பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.

  6. 1942

    முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).

  7. 1945

    இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.

  8. 1945

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் செருமனியின் வூர்சுபேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

  9. 1962

    மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.

  10. 1963

    பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.

  11. 1966

    ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

  12. 1968

    வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

  13. 1969

    வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் உயிரிழந்தனர்.

  14. 1978

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் அல்டோ மோரோ கடத்தப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார்.

  15. 1979

    சீன-வியட்நாமியப் போர்: மக்கள் விடுதலை இராணுவம் எல்லையைக் கடந்து சீனாவினுள் நுழைந்ததை அடுத்து, போர் முடிவுக்கு வந்தது.

  16. 1985

    அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் 1991 டிசம்பர் 4 இல் விடுதலை ஆனார்.

  17. 1988

    ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

  18. 1989

    எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

  19. 1995

    மிசிசிப்பி அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஏற்றுக் கொண்ட கடைசி அமெரிக்க மாநிலமானது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    சீனாவின் சிஜியாசுவாங் நகரில், இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 108 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர்.

  2. 2005

    இசுரேல் எரிக்கோவை அதிகாரபூர்வமாக பாலத்தீனியர்களிடம் ஒப்படைந்தது.

  3. 2006

    மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

  4. 2014

    கிரிமியாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில் உக்ரைனில் இருந்து பிரிந்து உருசியாவுடன் இணையப் பெருமான்மையானோர் வாக்களித்தனர்.

பிறப்புகள்

Births · 23

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.