Skip to content

Popular

March 27 வெள்ளி

On this day · March 27

வரலாற்றில் மார்ச்சு 27

மார்ச்சு 27 அன்று நிகழ்ந்த 55 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 14 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 1

மார்ச்சு 27 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

14ஆம் நூற்றாண்டு

  1. 1309

    திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு வெனிசு நகரத்தில் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கி தடை விதித்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1513

    நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு முனையைச் சென்றடைந்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1625

    முதலாம் சார்லசு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லாந்து மன்னராக முடி சூடியதுடன், பிரான்சு மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1794

    அமெரிக்க அரசு நிரந்தரமான கடற்படையை அமைத்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1814

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: மத்திய அலபாமாவில், அமெரிக்கப் படைகள் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் கிரீக்குகளைத் தோற்கடித்தனர்.

  2. 1836

    டெக்சாசில் மெக்சிக்கோ இராணுவத்தினர் 342 டெக்சாசு போர்க்கைதிகளைக் கொன்றனர்.

  3. 1866

    அமெரிக்க அரசுத்தலைவர் ஆண்ட்ரூ ஜோன்சன் குடிசார் உரிமைகள் சட்டத்துக்கு தனது வீட்டோ உரிமை மூலம் தடை விதித்தார். ஆனாலும் அவரது வீட்டோவை அமெரிக்க சட்டமன்றம் நீக்கி சட்டமூலத்தை ஏப்ரல் 9 இல் நடைமுறைப்படுத்தியது.

  4. 1886

    அப்பாச்சி பழங்குடிப் போர்வீரர் யெரொனீமோ அமெரிக்க இராணுவத்திடம் சரணடைந்தார். அப்பாச்சி போர்கள் முடிவுக்கு வந்தது.

  5. 1890

    கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்.

  6. 1899

    பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: எமிலியோ அகுயினால்டோ மரிலாவோ ஆற்றில் நடந்த சமரில் பிலிப்பீனியப் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1915

    குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.

  2. 1941

    இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் அச்சு அணி ஆதரவு அரசாங்கம் யுகோசுலாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.

  3. 1943

    இரண்டாம் உலகப் போர்: அலூசியன் தீவுகளில் அமெரிக்கக் கடற்படைக்கும் சப்பானுக்கும் இடையே சமர் ஆரம்பமானது.

  4. 1958

    நிக்கிட்டா குருசேவ் சோவியத் தலைமை அமைச்சரானார்.

  5. 1964

    வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் உயிரிழந்தனர். ஏங்கரெஜ் நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.

  6. 1968

    விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார்.

  7. 1969

    நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

  8. 1970

    கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.

  9. 1977

    அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் உயிரிழந்தனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.

  10. 1980

    நோர்வேயின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் உயிரிழந்தனர்.

  11. 1981

    போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 12 மில்லியன் தொழிலாளர்கள் 4 மணி நேர பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

  12. 1986

    ஆத்திரேலியா, மெல்பேர்ண் நகரில் காவல்துறை தலைமையகத்தின் முன்னால் வாகனக் குண்டு வெடித்ததில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைந்தனர்.

  13. 1990

    அமெரிக்கா காஸ்ட்ரோவிற்கு எதிரான கியூபாவிற்கான வானொலி பிரசார சேவையை ஆரம்பித்தது.

  14. 1993

    யான் சமீன் சீனாவின் அரசுத்தலைவரானார்.

  15. 1998

    அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆண்களின் விறைக்க முடியாமைக்கான சிகிச்சைக்காக வயாகராவை அனுமதித்தது.

  16. 1999

    அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோசுலாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    இசுரேல், நத்தானியாவில் பாலத்தீனர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2002

    பிரான்சு, நான்டேர் நகரில் நடைபெற்ற நகரசபைக் கூட்டம் ஒன்றை நோக்கி துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில், எட்டு நகரசபை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர்.

  3. 2009

    இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.

  4. 2014

    பிலிப்பீன்சு அரசு மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிப் போராளிகளுடன் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தியது.

  5. 2016

    லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.