Skip to content

Popular

March 10 செவ்வாய்

On this day · March 10

வரலாற்றில் மார்ச்சு 10

மார்ச்சு 10 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 26 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 2

மார்ச்சு 10 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 28

3ஆம் நூற்றாண்டு

  1. 298

    உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1629

    முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.

18ஆம் நூற்றாண்டு

  1. 1735

    உருசியாவிற்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின.

19ஆம் நூற்றாண்டு

  1. 1801

    பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

  2. 1804

    லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது.

  3. 1814

    பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

  4. 1830

    அரச நெதர்லாந்து கிழக்கிந்திய இராணுவம் அமைக்கப்பட்டது.

  5. 1848

    மெக்சிக்கோ-அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.

  6. 1865

    ஏமி ஸ்பெயின் என்ற அமெரிக்க அடிமைப் பெண், தனது முதலாளியிடம் இருந்து திருடிய குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டாள்.

  7. 1876

    அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.

  8. 1893

    ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1902

    துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.

  2. 1906

    வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  3. 1909

    மலேசியத் தீபகற்பத்தின் கடாரம், கிளாந்தான், பெர்லிஸ், திராங்கானு உள்ளடங்கிய இறைமையை ஆங்கிலோ-சியாம் உடன்படிக்கையின் படி தாய்லாந்து பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்தது.

  4. 1911

    இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.

  5. 1922

    கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் குடல்வாலழற்சி காரணமாக விடுதலையானார்.

  6. 1933

    கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கம் காரணமாக 120 பேர் உயிரிழந்தனர்.

  7. 1945

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் டோக்கியோ மீது குண்டுகள் வீசியதில் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

  8. 1948

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

  9. 1952

    கியூபாவில் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா தலைமையில் இராணுவப் புரட்சி வெற்றி பெற்றது.

  10. 1959

    திபெத்திய எழுச்சி: சீனாவினால் கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர் தலாய் லாமாவின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு அவருக்குப் பாதுகாப்பளித்தனர்.

  11. 1970

    வியட்நாம் போர்: அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.

  12. 1977

    யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

  13. 1982

    கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

  14. 1990

    எயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் கொல்லப்பட்டனர்.

  2. 2006

    செவ்வாய் உளவு சுற்றுக்கலன் செவ்வாய்க் கோளை அடைந்தது.

  3. 2011

    சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 26

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 10 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.