Skip to content

Popular

March 25 புதன்

On this day · March 25

வரலாற்றில் மார்ச்சு 25

மார்ச்சு 25 அன்று நிகழ்ந்த 47 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 7 இறப்புகள் · 7 சிறப்பு நாட்கள் · 4

மார்ச்சு 25 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

8ஆம் நூற்றாண்டு

  1. 708

    சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

  2. 717

    மூன்றாம் தியோடோசியசு பைசாந்தியப் பேரரசர் பதவியில் இருந்து விலகி மதகுருவானார்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1199

    இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் பிரான்சுடன் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்தார். இவர் ஏப்ரல் 6 ஆம் நாள் இறந்தார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1306

    இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்து மன்னராகப் பதவியேற்றார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1409

    பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1584

    சர் வால்ட்டர் ரேலி வர்ஜீனியாவில் குடியேற்றத்தை ஏற்படுத்த காப்புரிமம் பெற்றார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1655

    டைட்டன் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1802

    பிரான்சுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே "உறுதியான அமைதி உடன்பாடு" எட்டப்பட்டது.

  2. 1807

    அடிமை வணிகம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டது.

  3. 1807

    சுவான்சி-மம்பில்சு ரெயில்வே என்ற உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பிரித்தானியாவில் ஆரம்பமாகியது.

  4. 1811

    இறைமறுப்பின் தேவை என்ற பிரசுரத்தை வெளியிட்டமைக்காக பெர்சி பைச்சு செல்லி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

  5. 1821

    ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் (யூலியன் நாள்காட்டியில் 1821 பெப்ரவரி 23 இல் ஆரம்பமானது.

  6. 1865

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில், கூட்டமைப்புப் படைகள் இசுட்டெட்மன் கோட்டையைத் தற்காலிகமாக அமெரிக்கப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.

20ஆம் நூற்றாண்டு

  1. 1911

    நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  2. 1918

    பெலருஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

  3. 1931

    இசுக்காட்பரோ சிறுவர்கள் அலபாமாவில் கைது செய்யப்பட்டு வன்கலவிக்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

  4. 1941

    இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யுகோசுலாவியா இணைந்தது.

  5. 1947

    அமெரிக்காவில் இலினோய் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிப்பில் 111 பேர் உயிரிழந்தனர்.

  6. 1949

    எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 குலாக்குகள் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.

  7. 1953

    ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.

  8. 1954

    முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000).

  9. 1954

    இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.

  10. 1957

    மேற்கு செருமனி, பிரான்சு, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகியவற்ற உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.

  11. 1965

    மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் தமது 4-நாள் 50-மைல் எதிர்ப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.

  12. 1971

    வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்கு பாகித்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

  13. 1975

    சவூதி அரேபிய மன்னர் பைசால் தனது உளப் பிறழ்ச்சி கொண்ட மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  14. 1988

    செக்கோசிலோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  15. 1992

    சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.

  16. 1996

    மாட்டுப் பித்தநோய் காரணமாக பிரித்தானிய மாட்டிறைச்சி மற்றும் அதன் துணைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.

பிறப்புகள்

Births · 7

இறப்புகள்

Deaths · 7

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 25 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.