Skip to content

Popular

March 3 செவ்வாய்

On this day · March 3

வரலாற்றில் மார்ச்சு 3

மார்ச்சு 3 அன்று நிகழ்ந்த 72 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 20 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 4

மார்ச்சு 3 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 35

5ஆம் நூற்றாண்டு

  1. 473

    கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.

8ஆம் நூற்றாண்டு

  1. 724

    யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1284

    வேல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1575

    இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.

  2. 1585

    அந்திரேயா பலாடியோ வடிவமைத்த ஒலிம்பிக் நாடக அரங்கு விசென்சா நகரில் திறக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1833

    அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.

  2. 1845

    புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

  3. 1857

    இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.

  4. 1859

    ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.

  5. 1861

    உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.

  6. 1873

    அஞ்சல் மூலம் "ஆபாசமான, அல்லது கவர்ச்சியான" நூல்களை அனுப்புவது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

  7. 1878

    உதுமானியப் பேரரசிடம் இருந்து பல்கேரியா விடுதலை அடைந்தது. அடுத்த சில மாதங்களில் பெர்லினில் நடந்த ஆறு நாடுகளின் மாநாட்டில் இவ்வுரிமை மறுக்கப்பட்டு, பல்கேரியா உதுமானியப் பேரரசின் குத்தகை நாடு என அறிவிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1904

    எடிசனின் போனோகிராமைக் கொண்டு முதன் முதலாக அரசியல் ஆவணம் ஒன்றின் ஒலிப்பதிவை இரண்டாம் வில்லியம் உருவாக்கினார்.

  2. 1905

    உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினார்.

  3. 1913

    பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ரது.

  4. 1918

    முதலாம் உலகப் போரில் உருசியாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர செருமனி, ஆஸ்திரியா, உருசியா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.

  5. 1923

    டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

  6. 1924

    உதுமானியப் பேரரசின் கலிபா இரண்டாம் அப்துல்மெசித் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து 14-ஆம் நூற்றாண்டின் பழமை வாய்ந்த இசுலாமியக் கலீபகம் முடிவுக்கு வந்தது.

  7. 1931

    ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.

  8. 1938

    சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

  9. 1939

    மும்பாயில் மகாத்மா காந்தி பிரித்தானியருக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

  10. 1940

    சுவீடனில் இடதுசாரி கம்யூனிஸ்டுக் கட்சியின் செய்திப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர்.

  11. 1942

    இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் சப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.

  12. 1943

    இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.

  13. 1945

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க, பிலிப்பீனியப் படையினர் மணிலாவை மீண்டும் கைப்பற்றினர்.

  14. 1945

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படையினர் நெதர்லாந்தின் டென் ஹாக் நகர் மீது தவறுதலாகக் குண்டுகளை வீசியதில் 511 பேர் உயிரிழந்தனர்.

  15. 1953

    கனடிய பசிபிக் ஏர் லைன்சு விமானம் ஒன்று கராச்சியில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

  16. 1958

    ஈராக்கின் பிரதமராக நூரி-அல்-சயீது எட்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  17. 1969

    நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.

  18. 1974

    பாரிசு அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் உயிரிழந்தனர்.

  19. 1985

    சிலியில் வால்பரைசோ என்ற பகுதியில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 177 பேர் உயிரிழந்தனர்.

  20. 1986

    ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான "ஆத்திரேலியா சட்டம் 1986" நடைமுறைக்கு வந்தது.

  21. 1991

    சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    இசுட்டீவ் பொசெட் என்ற அமெரிக்கர் எரிபொருள் எதுவும் மீள நிரப்பாமல் தனியே விமானம் ஒன்றில் உலகைச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்தார்.

  2. 2013

    கராச்சியில் சியா முசுலிம்கள் வாழும் பகுதியில் குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 20

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.