Skip to content

Popular

March 24 செவ்வாய்

On this day · March 24

வரலாற்றில் மார்ச்சு 24

மார்ச்சு 24 அன்று நிகழ்ந்த 74 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 28 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 3

மார்ச்சு 24 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

15ஆம் நூற்றாண்டு

  1. 1401

    மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1550

    பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

17ஆம் நூற்றாண்டு

  1. 1603

    முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார்.

  2. 1663

    இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவி செய்தமைக்காக கரொலைனா மாகாணக் குடியேற்றம் எட்டு பிரபுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1720

    முதலாம் பிரெடெரிக் சுவீடனின் மன்னராக முடிசூடினார்.

  2. 1765

    பெரிய பிரித்தானியா 13 குடியேற்றங்களிலும் தமது படையினரை நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றியது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1829

    கத்தோலிக்கர் நாடாளுமன்றத்தில் பணியாற்ற அனுமதித்து பிரித்தானிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.

  2. 1832

    அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில், மோர்மொன் தலைவர் இரண்டாம் யோசப்பு இசுமித்து கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டார்.

  3. 1837

    கனடாசில் ஆப்பிரிக்கக் கனடியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

  4. 1854

    வெனிசுவேலாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

  5. 1878

    பிரித்தானியக் கப்பல் யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.

  6. 1882

    காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.

  7. 1896

    வரலாற்றில் முதன் முதலாக வானொலி சமிக்கையை உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உருவாக்கினார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1921

    முதலாவது பன்னாட்டு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி மான்டே கார்லோவில் இடம்பெற்றது.

  2. 1934

    பிலிப்பீன்சு தன்னாட்சியுள்ள பொதுநலவாய நாடாக அனுமதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.

  3. 1944

    நாட்சி செருமனியப் படைகள் உரோமை நகரில் 335 இத்தாலியப் பொதுமக்களைக் கொன்ரனர்

  4. 1944

    இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் செருமனிய சிறையில் இருந்து 76 நேசப் படையின் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர். இந்நிகழ்வு பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

  5. 1946

    பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியை இந்தியத் தலைமையிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தது.

  6. 1947

    மவுண்ட்பேட்டன் பிரபு பிரித்தானிய இந்தியாவின் ஆளுநரானார்.

  7. 1961

    பிரெஞ்சு மொழிக்கான கியுபெக் வாரியம் அமைக்கப்பட்டது.

  8. 1965

    இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

  9. 1965

    நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியது.

  10. 1976

    அர்கெந்தீனாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. இசபெல் பெரோனின் ஆட்சி பறிக்கப்பட்டது.

  11. 1977

    இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரல்லாத முதலாவது பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  12. 1980

    எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சான் சல்வதோரில் படுகொலை செய்யப்பட்டார்.

  13. 1993

    சூமேக்கர்-லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.

  14. 1998

    இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற சுழற்காற்றினால் 250 பேர் உயிரிழந்து, 3000க்கு மேல் காயமடைந்தனர்.

  15. 1999

    கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொசுலாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.

  16. 1999

    பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 38 பேர் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    ஈராக்கில் இருந்து அமெரிக்க, பிரித்தானியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு 21–1 என ஆதரவாக வாக்களித்தது.

  2. 2008

    பூட்டான் அதிகாரபூர்வமாக மக்களாட்சிக்கு மாறியது. முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

  3. 2015

    செருமன்விங்ஸ் விமானம் 9525 விமானம் பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணம் செய்த னைத்து 150 பேரும் உயிரிழந்தனர்.

  4. 2020

    இந்தியாவில் கொரோனாவைரசு பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பிறப்புகள்

Births · 28

இறப்புகள்

Deaths · 10

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.