Skip to content

Popular

March 11 புதன்

On this day · March 11

வரலாற்றில் மார்ச்சு 11

மார்ச்சு 11 அன்று நிகழ்ந்த 54 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 11 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1

மார்ச்சு 11 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

3ஆம் நூற்றாண்டு

  1. 222

    உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.

17ஆம் நூற்றாண்டு

  1. 1649

    புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1702

    முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது.

  2. 1784

    மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1812

    சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் 3-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

  2. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.

  3. 1864

    இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.

  4. 1888

    ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.

  5. 1897

    மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1902

    இலங்கையில் காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.

  2. 1905

    இலங்கையில் காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.

  3. 1917

    முதலாம் உலகப் போர்: பக்தாத் நகரம் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.

  4. 1918

    உருசியாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.

  5. 1931

    சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

  6. 1941

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் கடன்-குத்தகை ஒப்பந்தம் சட்டத்தை அமுல்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பு போர்த் தளவாடங்கள் நேச நாடுகளுக்கு கடனாக அனுப்பப்பட்டன.

  7. 1945

    இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளங்கள் மீது மிகப்பெரிதான கமிக்காஸ் தாக்குதலை ஆரம்பித்தது.

  8. 1945

    இரண்டாம் உலகப் போர்: சப்பானின் பொம்மை அரசு வியட்நாம் இராச்சியம் பாவோ தாய் தலைமையில் அமைக்கப்பட்டது.

  9. 1946

    நாட்சிகளின் அவுசுவிட்சு வதமிகாமின் முதலாம் கட்டலை அதிகாரி ருடோல்ஃப் ஒசு பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.

  10. 1958

    ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்கு கரோலைனாவில் பலர் காயமடைந்தனர்.

  11. 1977

    வாசிங்டனில் அனாஃபி முசுலிம்களால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 130 பேரும் மூன்று இசுலாமிய நாடுகளின் கூட்டு முயற்சியை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.

  12. 1978

    ஒன்பது பாலத்தீனத் தீவிரவாதிகள் இசுரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 37 பொதுமக்களைக் கொன்றனர்.

  13. 1983

    பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.

  14. 1990

    லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.

  15. 1998

    திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.

  16. 1999

    இன்ஃபோசிஸ், இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    எசுப்பானியா தலைநகர் மாத்ரிதில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.

  2. 2007

    தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4பி என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5ஏ என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.

  3. 2009

    செருமனியில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.

  4. 2010

    செபஸ்டியான் பினேரா சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் பிச்சிலெமு பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட நிலநடுக்கம் பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.

  5. 2011

    சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.

  6. 2012

    ஆப்கானித்தான், காந்தாரம் அருகே அமெரிக்க இராணுவ வீரன் 16 பொதுமக்களைப் படுகொலை செய்தான்.

பிறப்புகள்

Births · 11

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 11 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.