Skip to content

Popular

March 29 ஞாயிறு

On this day · March 29

வரலாற்றில் மார்ச்சு 29

மார்ச்சு 29 அன்று நிகழ்ந்த 50 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 6 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2

மார்ச்சு 29 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

9ஆம் நூற்றாண்டு

  1. 845

    பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1461

    ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1632

    கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1792

    13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1807

    4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.

  2. 1809

    சுவீடன் மன்னர் நான்காம் குஸ்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  3. 1831

    துருக்கிக்கு எதிராக பொசுனிய எழுச்சி ஆரம்பமானது.

  4. 1847

    மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் வேராகுரூசு நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.

  5. 1849

    பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.

  6. 1857

    பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.

  7. 1867

    கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.

  8. 1879

    ஆங்கில-சூலூ போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.

  9. 1886

    அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1945

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் நான்காம் பிரிவு இராணுவம் சோவியத் செஞ்சேனையினால் முற்றாக அழிக்கப்பட்டது.

  2. 1945

    இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் வெடிகுண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.

  3. 1947

    மடகாசுகரில் பிரான்சிய குடியேற்ற ஆட்சிக்கெதிராக மலகாசி எழுச்சி ஆரம்பமானது.

  4. 1961

    வாசிங்டன், டி. சி. மக்கள் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.

  5. 1962

    அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் அர்த்தூரோ புரொந்தீசி இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  6. 1971

    மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.

  7. 1973

    வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.

  8. 1973

    அமெரிக்காவின் லாவோஸ் மீதான குண்டுத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.

  9. 1974

    நாசாவின் மரைனர் 10 விண்ணுளவி புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.

  10. 1974

    சீனாவின் சென்சி மாகாணத்தில் சுடுமட்சிலைப் படை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

  11. 1999

    உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    பல்காரியா, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, உருமேனியா, சிலோவாக்கியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.

  2. 2007

    கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.

  3. 2008

    பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.

  4. 2010

    மாஸ்கோ மெட்ரோ தொடருந்து நிலையத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

  5. 2013

    தன்சானியா, தாருசலாம் நகரில் 16-மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

  6. 2014

    ஐக்கிய இராச்சியத்தில் முதலாவது ஒருபால் திருமணங்கள் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.

பிறப்புகள்

Births · 6

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · மார்ச்சு

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.