Skip to content

Popular

April 24 வெள்ளி

On this day · April 24

வரலாற்றில் ஏப்பிரல் 24

ஏப்பிரல் 24 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 22 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 5

ஏப்பிரல் 24 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 1479

    எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1558

    ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1704

    அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை "த பொஸ்டன்" நாளிதழ் வெளியிடப்பட்டது.

  2. 1800

    அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1863

    கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

  2. 1877

    உருசியா உதுமானியப் பேரரசு மீது போர் தொடுத்தது..

  3. 1895

    உலகத்தை தனியாளாக முதற்தடவையாக சுற்றிய யோசுவா சிலோக்கம் மாசச்சூசெட்ஸ் பாஸ்டனில் இருந்து ஸ்பிறே என்ற படகில் புறப்பட்டார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1908

    லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 1915

    கான்ஸ்டன்டீனபோலில் 250 ஆர்மீனிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்மீனிய இனப்படுகொலை ஆரம்பமானது.

  3. 1916

    1915 இல் தென்முனைப் பெருங்கடலில் மூழ்கிய என்டூரன்சு கப்பலையும், அதன் மாலுமிகளையும் மீட்கும் பொருட்டு ஏர்னெஸ்டு சாக்கில்டனும் மேலும் ஐவரும் யானைத் தீவு என்ற ஆளில்லா தீவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

  4. 1916

    அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர்.

  5. 1918

    முதலாம் உலகப் போர்: தாங்கிகளுக்கிடையேயான முதலாவது சமர் இடம்பெற்றது. பூன்று பிரித்தானியத் தாங்கிகளும், செருமனியின் மூன்று தாங்கிகளும் போரில் ஈடுபட்டன.

  6. 1926

    செருமனி, சோவியத் ஒன்றியம் இரண்டும் மூன்றாவது நாடு ஒன்று மற்றைய நாட்டைத் தாக்க முற்படும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடுநிலைமை வகிக்கும் உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டது.

  7. 1933

    நாட்சி ஜெர்மனி யெகோவாவின் சாட்சிகள் மீதான மத ஒறுப்பை ஆரம்பித்தது.

  8. 1955

    இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  9. 1957

    சூயெசு நெருக்கடி: ஐநா அமைதிப்படை தருவிக்கப்பட்டதை அடுத்து சுயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டது.

  10. 1961

    17ம் நூற்றாண்டைச் சேர்ந்த "வாசா" என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.

  11. 1964

    இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராக செல்லையா கோடீஸ்வரன் என்பவர் தொடுத்த வழக்கில் இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  12. 1965

    டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.

  13. 1967

    சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த உருசிய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது வான்குடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.

  14. 1970

    காம்பியா பொதுநலவாயத்தின் கீழ் குடியரசானது. தவ்தா யவாரா அதன் முதலாவது அரசுத்தலைவரானார்.

  15. 1990

    டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

  16. 1993

    இந்தியாவில் பஞ்சாயத்து இராச்சியம் அமைக்கப்பட்டது.

  17. 1993

    லண்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    ஐக்கிய அமெரிக்கா லிபியா மீது 18 ஆண்டுகளுக்கு முன்னர் விதித்த பொருளாதாரத் தடையை நீக்கியது. லிபியா பேரழிவு ஆயுதங்களை அழிக்க உடன்பட்டது.

  2. 2005

    கர்தினால் யோசப் ராத்சிங்கர் கத்தோலிக்க திருச்சபை பதினாறாம் பெனடிக்டு என்ற பெயரில் 265-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

  3. 2006

    நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.

  4. 2007

    பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

  5. 2013

    வங்காளதேசம், டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 22

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · ஏப்பிரல்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.