Skip to content

Popular

January 25 ஞாயிறு

On this day · January 25

வரலாற்றில் சனவரி 25

சனவரி 25 அன்று நிகழ்ந்த 82 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 23 இறப்புகள் · 19 சிறப்பு நாட்கள் · 2

சனவரி 25 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 38

1ஆம் நூற்றாண்டு

  1. 41

    குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார்.

8ஆம் நூற்றாண்டு

  1. 750

    அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1348

    இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1498

    போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1515

    பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார்.

  2. 1533

    இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1755

    மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

  2. 1765

    போக்லாந்து தீவுகளில் முதலாவது பிரித்தானியக் குடியேற்றம் எக்மண்ட் துறையில் ஆரம்பமானது.

  3. 1791

    பழைய கியூபெக் மாகாணம் மேல் கனடா, கீழ் கனடா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1881

    தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

  2. 1882

    வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் அரசு முறைப் பயணமாக கொழும்பு வந்தனர்.

  3. 1890

    நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1917

    டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.

  2. 1918

    உக்ரைன் போல்செவிக் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  3. 1924

    முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் சாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.

  4. 1942

    இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.

  5. 1945

    இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை முடிவுற்றது.

  6. 1947

    தோமசு கோல்ட்சிமித் என்பவர் முதலாவது இலத்திரனியல் விளையாட்டுக் கருவி, "எதிர்மின் கதிர் குழாய் கேளிக்கைக் கருவியைக்" கண்டுபிடித்தார்.

  7. 1949

    முதலாவது எம்மி விருதுகள் வழங்கப்பட்டன.

  8. 1949

    சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.

  9. 1949

    இசுரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.

  10. 1955

    சோவியத் ஒன்றியம் செருமனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.

  11. 1971

    உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.

  12. 1971

    இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  13. 1980

    அன்னை தெரேசாவிற்கு இந்தியாவின் பாரத ரத்னா என்ற அதியுயர் விருது வழங்கப்பட்டது.

  14. 1981

    மா சே துங்கின் மனைவி சியாங் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

  15. 1993

    வர்ஜீனியாவில் அமெரிக்காவின் சிஐஏ தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.

  16. 1993

    கொட்டியாரக் குடாக் கடலில் மூதூர்-திருகோணமலை நகரங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டு வந்த பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் மூழ்கி இறந்தனர்.

  17. 1994

    நாசாவின் 'கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

  18. 1998

    கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.

  19. 1999

    மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.

  2. 2004

    ஆப்பர்சூனிட்டி தளவுளவி செவ்வாயில் தரையிறங்கியது.

  3. 2005

    இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர்.

  4. 2006

    சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

  5. 2009

    முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.

  6. 2011

    எகிப்தியப் புரட்சியின் முதல் அலை ஆரம்பமானது.

  7. 2013

    வெனிசுவேலாவில் சிறைச்சாலைக் கலவரம் ஒன்றில் 50 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 23

இறப்புகள்

Deaths · 19

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 25 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.