Skip to content

Popular

January 19 திங்கள்

On this day · January 19

வரலாற்றில் சனவரி 19

சனவரி 19 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 39 பிறப்புகள் · 17 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 2

சனவரி 19 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 39

4ஆம் நூற்றாண்டு

  1. 379

    பேரரசர் கிராத்தியான் உரோமைப் பேரரசின் கிழக்கு மாகானங்களுக்குப் பொறுப்பாக பிளாவியசு தியோடோசியசை நியமித்தார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1419

    நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1511

    இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின.

17ஆம் நூற்றாண்டு

  1. 1661

    பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1764

    உலகின் முதலாவது அஞ்சல் குண்டுவெடிப்பு டென்மார்க் இராணுவத் தலைவர் போல்சனைப் படுகாயப்படுத்தியது.

  2. 1788

    இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை வந்தடைந்தது.

  3. 1795

    நெதர்லாந்தில் பத்தாவியக் குடியரசு அறிவிக்கப்பட்டதை அடுத்து இடச்சுக் குடியரசு முடிவுக்கு வந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1806

    நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.

  2. 1817

    சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து ஆன்டெசைக் கடந்தது.

  3. 1818

    பிரெஞ்சு இயற்பியலாளர் அகஸ்டின் பிரெனெல் முனைவுற்ற ஒளியைப் பற்றிய விளக்கத்தை அறிவித்தார்.

  4. 1839

    பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடன் நகரைக் கைப்பற்றியது.

  5. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜோர்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது.

  6. 1862

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: மில் ஸ்பிரிங்ஸ் சண்டையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தனது முதல் பெரிய தோல்வியை சந்தித்தது.

  7. 1867

    பிரித்தானிய இலங்கையில் பால்க்னர் என்பவரைக் கொன்ற குற்றத்திற்காக கல்யாண் கங்காணி என்பவர் தூக்கிலிடப்பட்டார்.

  8. 1871

    பாரிசு முற்றுகையின் போது, புருசியா புனித குவென்டின் சமரை வென்றது.

  9. 1883

    முதலாவது மேலே செல்லும் கம்பி வலையமைப்புபைக் கொண்ட மின்னொளி அமைப்பு எடிசனால் நியூ செர்சியில் அமைக்கப்பட்டது.

  10. 1899

    ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1903

    ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.

  2. 1917

    லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.

  3. 1920

    அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத்தில் சேருவதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது.

  4. 1927

    பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.

  5. 1937

    அவார்டு இயூசு லாஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூ யார்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 நொடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.

  6. 1941

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கின.

  7. 1942

    இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டன.

  8. 1945

    இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்துல் நாட்சிகளின் லோட்சு வதைமுகாமில் இருந்து யூதக் கைதிகளை விடுவித்தன.

  9. 1946

    சப்பானியப் போர்க்குற்றவாளிகளை விசாரிப்பதற்கென டக்ளசு மக்கார்த்தர் தோக்கியோவில் தூரகிழக்கிற்கான பன்னாட்டு இராணுவ நீதிமன்றத்தை அமைத்தார்.

  10. 1966

    இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  11. 1981

    ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

  12. 1983

    ஆப்பிள் நிறுவனத்தின் வரைகலை பயனர் இடைமுகம் மற்றும் சுட்டியுடனான முதலாவது வணிக-முறை தனி மேசைக் கணினி ஆப்பிள் லீசா" வெளியிடப்பட்டது.

  13. 1983

    நாட்சி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டார்.

  14. 1986

    முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.

  15. 1991

    வளைகுடாப் போர்: ஈராக்கு இரண்டாவது ஸ்கட் ஏவுகணையை இசுரேல் மீது ஏவியது. 15 பேர் காயமடைந்தனர்.

  16. 1993

    செக் குடியரசு, சிலோவாக்கியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.

  17. 1993

    வேதி ஆயுத உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.

  18. 1993

    ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நட்டத்தை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வேறொரு நிறுவனம் இந்த அளவில் நட்டம் அடைந்ததில்லை.

  19. 1997

    30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் எபிரோன் திரும்பினார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் அங்கேரியில் வீழ்ந்து நொறுங்கியது.

  2. 2006

    புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.

  3. 2007

    இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 18

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.