Skip to content

Popular

January 22 வியாழன்

On this day · January 22

வரலாற்றில் சனவரி 22

சனவரி 22 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 15 இறப்புகள் · 11

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

7ஆம் நூற்றாண்டு

  1. 613

    கான்ஸ்டண்டைன் தனது 8-வது மாதத்தில் அவனது தந்தை பைசாந்தியப் பேரரசர் எராக்கிளியசினால் துணை-பேரரசராக (சீசர்) நியமிக்கப்பட்டான்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1506

    150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.

  2. 1517

    முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர்.

  3. 1555

    ஆவா இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மர்) தோற்றது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1808

    பிரெஞ்சு இராணுவத்தினரின் முற்றுகையை அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் போர்த்துகலில் இருந்து வெளியேறிய போர்த்துக்கீச அரச குடும்பத்தினர் பிரேசில் வந்து சேர்ந்தனர்.

  2. 1840

    பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.

  3. 1849

    இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்: பஞ்சாப், முல்தான் முற்றுகை ஒன்பது மாதங்களின் பின்னர் முடிவடைந்தது. கடைசி சீக்கியப் படை சரணடைந்தது.

  4. 1863

    உருசியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.

  5. 1879

    ஆங்கில-சூலூ போர்: தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

  6. 1889

    கொலம்பியா கிராமபோன் வாசிங்டனில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.

  7. 1899

    ஆறு ஆத்திரேலியக் குடியேற்றப் பிராந்தியங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1901

    64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.

  2. 1905

    இரத்த ஞாயிறு: சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உருசியப் பேரரசருக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1905 புரட்சி ஆரம்பமானது.

  3. 1906

    பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் உயிரிழந்தனர்.

  4. 1915

    மெக்சிக்கோ, குவாதலஹாரா நகரில் தொடருந்து ஒன்று பள்லம் ஒன்றில் வீழ்ந்ததில், 600 பேர் உயிரிழந்தனர்.

  5. 1919

    உக்ரைன் மக்கள் குடியரசும், மேற்கு உக்ரைன் தேசிய குடியரசும் இணைந்தன.

  6. 1927

    உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைபெற்ற ஆர்சனல்-செப்பீல்ட் யுனைடெட் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது

  7. 1941

    இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் துப்ருக் நகரை நாட்சிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.

  8. 1942

    இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் சப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமடைந்தது.

  9. 1945

    இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான சோல்பரி ஆணைக்குழு முதன் முதலாக கொழும்பு நகர மண்டபத்தில் கூடியது.

  10. 1957

    சினாய் தீபகற்பத்தில் இருந்து இசுரேல் வெளியேறியது.

  11. 1964

    கென்னத் கவுண்டா வடக்கு றொடீசியாவின் முதலாவது அரசுத்தலைவரானார்.

  12. 1968

    அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.

  13. 1969

    சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் மீது மாஸ்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் அவர் காயமெதுவுமின்றித் தப்பினார்.

  14. 1973

    அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது.

  15. 1973

    நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.

  16. 1980

    நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் ஆந்திரே சாகரவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

  17. 1987

    பிலிப்பீன்சு பாதுகாப்புப் படைகள் மணிலாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10,000–15,000 பேர் மீது சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

  18. 1992

    சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.

  19. 1999

    இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆத்திரேலிய கிறித்தவப் போதகர் கிரகாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 22 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.