Skip to content

Popular

January 26 திங்கள்

On this day · January 26

வரலாற்றில் சனவரி 26

சனவரி 26 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 17 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 3

சனவரி 26 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

7ஆம் நூற்றாண்டு

  1. 661

    கடைசி கலீபா அலீயின் படுகொலையுடன் ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1500

    எசுப்பானிய நாடுகாண் பயணி விசென்டே பின்சோன் பிரேசிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1531

    போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

  2. 1564

    ஊலா நகரப் போரில் லித்துவேனியா உருசியாவை வென்றது.

  3. 1564

    இத்தாலியின் கத்தோலிக்க டிரெண்ட் பேரவை கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றிற்கிடையேயான அதிகாரபூர்வமான வேறுபாட்டை வரையறுத்தது.

  4. 1565

    விஜயநகரப் பேரரசுக்கும் இசுலாமிய தக்காண சுல்தான்களுக்கும் இடையே இடம்பெற்ற தலைக்கோட்டை சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இசுலாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1700

    வட அமெரிக்காவின் மேற்குக் கரையில் 8.7–9.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1788

    ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1837

    மிச்சிகன் அமெரிக்காவின் 26-வது மாநிலமாக இணைந்தது.

  2. 1838

    அமெரிக்காவில் டென்னிசி முதலாவது மாநிலமாக மதுவிலக்கை அமுல் படுத்தியது.

  3. 1841

    ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.

  4. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.

  5. 1870

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    3,106.75 கரட் (0.621350 கிகி) எடையுள்ள கலினன் என்ற உலகின் மிகப்பெரிய வைரம் தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

  2. 1924

    சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

  3. 1926

    ஜான் லோகி பைர்டு முதலாவது தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.

  4. 1930

    இந்திய தேசியக் காங்கிரஸ் 26 சனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாளாக) அறிவித்தது. இது 17 ஆண்டுகளின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது.

  5. 1934

    செருமனிக்கும், போலந்துக்கும் இடையே அமைதி உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

  6. 1939

    எசுப்பானிய உள்நாட்டுப் போர்: இத்தாலியின் உதவியுடன் பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்கு ஆதரவான படைகள் பார்செலோனாவைக் கைப்பற்றின.

  7. 1942

    இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.

  8. 1950

    இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.

  9. 1952

    பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் அழிந்தது.

  10. 1962

    ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.

  11. 1965

    இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.

  12. 1980

    இசுரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.

  13. 1986

    தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.

  14. 1991

    சோமாலியாவில் சியாத் பாரியின் அரசு கலைக்கப்பட்டது.

  15. 1992

    உருசியாவின் அணுவாயுத ஏவுகணைகள் அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அரசுத்தலைவர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    குஜராத்தில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

  2. 2015

    எசுப்பானியாவில் வான்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.