Skip to content

Popular

January 9 வெள்ளி

On this day · January 9

வரலாற்றில் சனவரி 9

சனவரி 9 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 37 பிறப்புகள் · 22 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 3

சனவரி 9 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 37

5ஆம் நூற்றாண்டு

  1. 475

    பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1150

    சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1349

    கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1431

    ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1707

    இசுக்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துப் பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

  2. 1760

    அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்கள் மரதர்களை பராரி மலைகளில் நடைபெற்ற சமரில் தோற்கடித்தனர்.

  3. 1788

    கனெடிகட் அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது.

  4. 1792

    உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  5. 1799

    பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியப் போர்களுக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1816

    ஹம்பிரி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

  2. 1822

    போர்த்துக்கீச மன்னர் ஆறாம் யோவானின் கட்டளைக்கு மாறாக போர்த்துக்கீச இளவரசர் முதலாம் பெத்ரோ பிரேசிலில் தங்கியிருக்க முடிவு செய்தார். பிரேசில் விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

  3. 1857

    கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.

  4. 1858

    டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

  5. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.

  6. 1878

    இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    உருசியத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றன. (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 உருசியப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.

  2. 1909

    தென் முனைக்கு சென்ற எர்னஸ்டு சாக்கில்டன் தலைமையிலான குழு தென் முனையில் இருந்து 97 கடல் மைல் தொலைவில் பிரித்தானியக் கொடியை நாட்டியது.

  3. 1915

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த இந்நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

  4. 1916

    முதலாம் உலகப் போர்: உதுமானியர்களின் வெற்றியுடன் கலிப்பொலி போர்த்தொடர் முடிவுக்கு வந்தது.

  5. 1921

    புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

  6. 1927

    கனடா, மொண்ட்ரியால் நகரில் நாடக அரங்கு ஒன்றில் தீ பரவியதில் 78 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

  7. 1951

    ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

  8. 1957

    சூயசு கால்வாயை எகிப்திடம் இருந்து மீலப்பெறத் தவறியமைக்காக பிரித்தானியப் பிரதமர் சர் அந்தோனி ஏடென் பதவி துறந்தார்.

  9. 1964

    மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

  10. 1972

    ஆங்காங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.

  11. 1974

    யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

  12. 1990

    நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

  13. 1991

    ஈராக்கின் குவைத் மீதான படையெடுப்பு குறித்து சுமுகமான தீர்வு காண்பதற்காக அமெரிக்க, ஈராக்கியப் பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்தித்தனர்.

  14. 1991

    லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியஸ் நகரை முற்றுகையிட்டது.

  15. 1992

    யுகோசுலாவியாவில் சிறுப்ஸ்கா குடியரசு என்ற புதிய குடியரசு நிறுவப்பட்டது.

  16. 1992

    முதற்தடவையாக சூரியமண்டல புறவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.

  2. 2004

    சட்டவிரோத அல்பேனியக் குடியேறிகளை இத்தாலிக்குஏற்றிச் சென்ற படகு ஒன்று கரபுருன் குடாவில் மூழ்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

  3. 2005

    பலத்தீன தேசிய ஆணையத்தின் தலைவராக மகுமுது அப்பாசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  4. 2005

    சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.

  5. 2007

    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஐ-போனை சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.

  6. 2011

    ஈரான் விமானம் ஒன்று ஊர்மியா நகருக்கருகில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 22

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.