Skip to content

Popular

January 28 புதன்

On this day · January 28

வரலாற்றில் சனவரி 28

சனவரி 28 அன்று நிகழ்ந்த 59 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 19 இறப்புகள் · 12

வரலாற்று நிகழ்வுகள்

Events · 28

9ஆம் நூற்றாண்டு

  1. 814

    முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார்.

11ஆம் நூற்றாண்டு

  1. 1077

    புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் திருச்சபைலிருந்தான வெளியேற்றத் தீர்மானம் இத்தாலியின் கனோசாவில் திருத்தந்தை ஏழாம் கிரகோரியின் முன்னால் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டபின் நீக்கப்பட்டது.

14ஆம் நூற்றாண்டு

  1. 1393

    பல நடனக் கலைஞர்களின் உடைகள் தீப்பிடித்த நிலையில் பிரான்சிய மன்னர் ஆறாம் சார்லசு மயிரிழையில் உயிர் தப்பினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1547

    எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

  2. 1573

    போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1624

    கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான செயிண்ட் கிட்சு சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.

  2. 1671

    பழைய பனாமா நகரம் தீக்கிரையானது.

  3. 1679

    சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1724

    உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.

  2. 1754

    சேரந்தீவம் என்ற சொல்லை முதல் தடவையாக சேர் ஒராசு வால்போல் பயன்படுத்தினார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1846

    இந்தியாவில் அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி சிமித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றன.

  2. 1855

    பனாமா கால்வாய் வழியே தொடருந்து ஒன்று அத்திலாந்திக்குப் பெருங்கடலில் இருந்து பசிபிக்குப் பெருங்கடல் வரை முதல் தடவையாகச் சென்றது.

  3. 1871

    பாரிசு மீதான முற்றுகை புருசியாவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

  4. 1882

    சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1909

    எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகின.

  2. 1918

    பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.

  3. 1932

    சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.

  4. 1933

    பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.

  5. 1935

    ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.

  6. 1945

    இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.

  7. 1958

    லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.

  8. 1964

    பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வான்படை வானூர்தி ஒன்று கிழக்கு செருமனியின் எர்பூர்ட் நகர் மீது பறந்த போது, சோவியத் மிக்-19 ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதில் பயணம் செய்த மூவரும் கொல்லப்பட்டனர்.

  9. 1984

    வெப்ப மண்டலச் சூறாவளி டொமொய்னா தெற்கு மொசாம்பிக்கைத் தாக்கியதில், 214 பேர் உயிரிழந்தனர்.

  10. 1986

    சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.

  11. 1987

    கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2006

    போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர்.

  3. 2016

    ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

பிறப்புகள்

Births · 19

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.