Skip to content

Popular

January 17 சனி

On this day · January 17

வரலாற்றில் சனவரி 17

சனவரி 17 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 13 இறப்புகள் · 21 சிறப்பு நாட்கள் · 1

சனவரி 17 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 36

4ஆம் நூற்றாண்டு

  1. 395

    பேரரசர் முதலாம் தியோடோசியஸ் இறந்ததை அடுத்து, உரோமைப் பேரரசு நிரந்தரமாக கிழக்கு உரோமைப் பேரரசாகவும், மேற்கு உரோமைப் பேரரசாகவும் பிரிந்தன.

13ஆம் நூற்றாண்டு

  1. 1287

    அரகொன் மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1362

    ஐரோப்பாவில் பிரித்தானியத் தீவுகள், நெதர்லாந்து, வடக்கு செருமனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர்.

  2. 1377

    திருத்தந்தை பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை உரோமுக்கு மாற்றினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1524

    இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கான கடல் வழியைக் காணும் பொருட்டு மதீராவில் இருந்து மேற்குப் பக்கமாக பயணத்தை ஆரம்பித்தார்.

  2. 1595

    பிரான்சின் நான்காம் என்றி எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1608

    எத்தியோப்பியப் பேரரசர் முதலாம் சுசேனியோசு தலைமையிலான இராணுவம், ஒரோமோ படைகளைத் தோற்கடித்து 12,000 பேரைக் கொன்றது.

  2. 1648

    இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்லசுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1773

    கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1811

    மெக்சிக்கோ விடுதலைப் போர்: எசுப்பானியாவின் சுமார் 6,000 படை வீரர்கள் 100,000 மெக்சிக்கோ புரட்சியாளர்களைத் தோற்கடித்தனர்.

  2. 1819

    சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.

  3. 1852

    ஐக்கிய இராச்சியம் வால் ஆற்றுக்கு வடக்கே பூர்களை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தை தென்னாபிரிக்கக் குடியரசுடன் செய்து கொண்டது.

  4. 1893

    அவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லில்லியுகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.

  5. 1899

    பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1912

    பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் இராபர்ட் பால்க்கன் இசுக்காட் தென் துருவத்தை அடைந்தார்.

  2. 1915

    முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியத் துருக்கியை சரிக்காமிசு போரில் வென்றது.

  3. 1917

    கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.

  4. 1920

    ஐக்கிய அமெரிக்காவில் மதுசாரத் தடை அமுலுக்கு வந்தது.

  5. 1928

    லியோன் ட்ரொட்ஸ்கி மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் குளிர்காலக் கோட்டை ஊடறுத்து உரோமைக் கைப்பற்ற மோண்டி கசீனோ மீது முதலாவது தாக்குதலை மேற்கொண்டது. இச்சண்டைகளில் 105,000 நேசப் படையினர் கொல்லப்பட்டனர்.

  7. 1945

    இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின.

  8. 1945

    சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாட்சிகள் வெளியேற ஆரம்பித்தனர்.

  9. 1946

    ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை முதலாவது கூட்டத்தை நடத்தியது.

  10. 1948

    தென்கிழக்கு ஆசியாவில் தனது குடியேற்றத்தை மீண்டும் ஆரம்பிக்க முயன்ற நெதர்லாந்துக்கும், இந்தோனேசியாவுக்கும் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது.

  11. 1951

    சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.

  12. 1961

    கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

  13. 1981

    பிலிப்பீன்சில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்த இராணுவச் சட்டத்தை அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கோஸ் நீக்கினார்.

  14. 1991

    நோர்வே மன்னர் ஐந்தாம் ஓலவ் இறந்ததை அடுத்து அவரது மகன் ஐந்தாம் அரால்டு மன்னராக முடிசூடினார்.

  15. 1991

    வளைகுடாப் போர் ஆரம்பமானது.

  16. 1992

    இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தியமைக்காக சப்பானியப் பிரதமர் கீச்சி மியாசாவா தென் கொரியாவில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.

  17. 1994

    லாசு ஏஞ்சலசில் 6/7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 57 பேர் உயிரிழந்தனர்.

  18. 1995

    சப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் உயிரிழந்தனர்.

  19. 1998

    ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    காங்கோவில் நைராகொங்கோ எரிமலை வெடித்ததில் 400,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

  2. 2007

    வட கொரியா அணுவாயுதச் சோதனை நடத்தியதற்குப் பதிலளிக்கும் வகையில், ஊழிநாள் கடிகாரம் நள்ளிரவுக்கு 5 மணித்துளிகளுக்கு முன்னதாக இருக்குமாறு மாற்றியமைக்கப்பட்டது.

  3. 2010

    நைஜீரியாவில் முசுலிம், கிறித்தவக் குழுக்களிடையே கலவரம் வெடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 13

இறப்புகள்

Deaths · 21

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.