Skip to content

Popular

January 3 சனி

On this day · January 3

வரலாற்றில் சனவரி 3

சனவரி 3 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 41 பிறப்புகள் · 23 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1

சனவரி 3 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 41

15ஆம் நூற்றாண்டு

  1. 1431

    பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

  2. 1496

    லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை.

16ஆம் நூற்றாண்டு

  1. 1521

    திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1653

    இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1754

    அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.

  2. 1777

    பிரின்ஸ்டன் சமரில் அமெரிக்கத் தளபதி சியார்ச் வாசிங்டன் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவைத் தோற்கடித்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1815

    ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் உருசியாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.

  2. 1833

    போக்லாந்து தீவுகள் மீது பிரித்தானியா உரிமை கோரியது.

  3. 1848

    லைபீரியாவின் முதல் அரசுத்தலைவராக யோசப் யென்கின்சு ராபர்ட்சு பதவியேற்றார்.

  4. 1859

    தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

  5. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.

  6. 1870

    புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.

  7. 1888

    91 சமீ யேம்சு லிக் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் பயன்படுத்தப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் முறிவுத் தொலைநோக்கி ஆகும்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1911

    உருசிய துர்க்கெசுத்தானின் அல்மாத்தி நகரை 7.7 அளவு நிலநடுக்கம் தாக்கி அழித்தது.

  2. 1919

    பாரிசு அமைதி மாநாட்டில், ஈராக் அமீர் முதலாம் பைசல், சியோனிசத் தலைவர் சைம் வெயிசுமன் உடன் பலத்தீனத்தில் யூதப் பகுதியை அமைக்க உடன்பட்டார்.

  3. 1921

    துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.

  4. 1924

    பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.

  5. 1925

    இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக பெனிட்டோ முசோலினி அறிவித்தார்.

  6. 1932

    ஒந்துராசில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

  7. 1932

    பிரித்தானிய ஆட்சியாளர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.

  8. 1947

    அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

  9. 1956

    ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

  10. 1957

    முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.

  11. 1958

    மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

  12. 1959

    அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.

  13. 1961

    பனிப்போர்: கியூபா அமெரிக்கச் சொத்துகளைத் தேசியமயமாக்கியதை அடுத்து அமெரிக்க அரசு அந்நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது.

  14. 1961

    இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  15. 1962

    இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) பிடல் காஸ்ட்ரோவை மதவிலக்கு செய்து அறிவித்தார்.

  16. 1966

    இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தாசுகெண்டில் ஆரம்பமாயின.

  17. 1974

    யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.

  18. 1976

    அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.

  19. 1977

    ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.

  20. 1990

    பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.

  21. 1993

    மாஸ்கோவில் அமெரிக்கத் தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் போர்த்தந்திர படைக்கலக் குறைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

  22. 1994

    முன்னாள் இனவொதுக்கல் தாயகங்களில் இருந்து ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் தென்னாப்பிரிக்காவின் குடியுரிமையைப் பெற்றனர்.

  23. 1994

    உருசியாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.

  24. 1995

    விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் படைகள் செங்கடலில் 50 தொன் எடையுள்ள ஆயுதங்களுடன் பாலத்தீன சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றின.

  2. 2004

    எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் உயிரிழந்தனர்.

  3. 2015

    போகோ அராம் போராளிகள் வட-கிழக்கு நைஜீரியாவில் பாகா நகரைக் கைப்பற்றி இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர்.

  4. 2016

    சியா மதகுரு நிம்மர்-அல்-நிம்மர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரான் சவூதி அரேபியாவுடனான தூதரக உறவைத் துண்டித்தது.

பிறப்புகள்

Births · 23

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.