Skip to content

Popular

January 8 வியாழன்

On this day · January 8

வரலாற்றில் சனவரி 8

சனவரி 8 அன்று நிகழ்ந்த 74 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 37 பிறப்புகள் · 20 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 2

சனவரி 8 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 37

9ஆம் நூற்றாண்டு

  1. 871

    பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1297

    மொனாக்கோ விடுதலை பெற்றது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1454

    தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது.

  2. 1499

    பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1806

    கேப் குடியேற்றம் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.

  2. 1815

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: நியூ ஓர்லென்ஸ் சமரில் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை வென்றன.

  3. 1828

    ஐக்கிய அமெரிக்காவின் சனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

  4. 1835

    ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் சுழிய நிலையை எட்டியது.

  5. 1838

    ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.

  6. 1867

    வாசிங்டனில்யில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

  7. 1889

    எர்மன் ஒல்லெரித் மின்னாற்றலில் இயங்கும் துளை அட்டைக் கணிப்பானுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1902

    நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

  2. 1906

    நியூயோர்க்கில் அட்சன் ஆற்றில் களிமண் கிண்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.

  3. 1912

    ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

  4. 1916

    முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.

  5. 1926

    வியட்நாமின் கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார்.

  6. 1926

    அப்துல்லா பின் அப்துல் அசீசு எஜாசு நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவூதி அரேபியா என மாற்றினார்.

  7. 1940

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.

  8. 1946

    கோவை சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

  9. 1956

    எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.

  10. 1961

    அல்சீரியாவில் சார்லசு டி கோலின் கொள்கைகளுக்கு பிரஞ்சு மக்கள் பொது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.

  11. 1963

    ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக லியொனார்டோ டா வின்சியின் மோனா லிசா வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

  12. 1964

    அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அமெரிக்காவில் வறுமைக்கு எதிரான போரை அறிவித்தார்.

  13. 1972

    சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கித்தான் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ வங்காளத் தலைவர் முசிப்புர் ரகுமானை சிறையிலிருந்து விடுவித்தார்.

  14. 1973

    சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

  15. 1977

    சோவியத் தலைநகர் மாஸ்கோவில் ஆர்மீனிய பிரிவினைவாதிகளால் 37 நிமிடங்களில் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

  16. 1989

    இங்கிலாந்து கெக்வர்த் நகரில் போயிங் 727 வானூர்தி நெடுஞ்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 126 பேரில் 47 பேர் உயிரிழந்தனர்.

  17. 1994

    உருசியாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.

  18. 1995

    தமிழீழ விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.

  19. 1996

    சயீர் தலைநகர் கின்சாசாவில் அன்டனோவ் ஏஎன்-32 சரக்கு வானூர்தி ஒன்று சந்தை ஒன்றில் வீழ்ந்ததில் தரையில் 223 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரில் இருவரும் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    அமெரிக்காவில், வட கரொலைனாவில் ஏர் மிட்வெசுட் வானூர்தி ஒன்று சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 21 பேரும் உயிரிழந்தனர்.

  2. 2003

    துருக்கியில் தியார்பக்கீர் விமான நிலையம் அருகே துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பயணிகளில் 70 பேரும், பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

  3. 2004

    குயீன் மேரி 2 உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி திறந்து வைத்தார்.

  4. 2008

    கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டி. எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

  5. 2009

    இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பு நகரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  6. 2009

    கோஸ்ட்டா ரிக்காவின் வடக்கே 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.

  7. 2019

    தெகுரானில் இருந்து கீவ் நோக்கிச் சென்ற உக்ரைனிய போயிங் 737–800 பயணிகள் வானூர்தி புறப்பட்ட சில நிமிட நேரத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 167 பயணிகள் உட்பட அனைத்து 176 பேரும் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 20

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.