Skip to content

Popular

January 27 செவ்வாய்

On this day · January 27

வரலாற்றில் சனவரி 27

சனவரி 27 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 18 இறப்புகள் · 21 சிறப்பு நாட்கள் · 1

சனவரி 27 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

1ஆம் நூற்றாண்டு

  1. 98

    திராயான் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் உரோமைப் பேரரசு தனது உச்ச நிலையை எட்டியிருந்தது.

14ஆம் நூற்றாண்டு

  1. 1302

    கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

  2. 1343

    திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும், பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1606

    வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, சனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்.

  2. 1695

    உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா பேரரசரானார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1785

    அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1820

    மிகைல் லசாரொவ் தலைமையிலான உருசியக் குழு அந்தாட்டிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்தது.

  2. 1825

    ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் இந்தியப் பிராந்தியத்தை (இன்றைய ஓக்லகோமா) அங்கீகரித்தது. இதன் மூலம் கிழக்கிந்தியர்களை கட்டாயமாக "கண்ணீர்த் தடங்களில்" இடம்பெயர வைக்க முடிந்தது.

  3. 1858

    இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி நிதிக்காக இலங்கையில் £2,771 நிதி சேகரிக்கப்பட்டது.

  4. 1880

    தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.

  5. 1888

    தேசிய புவியியல் கழகம் வாசிங்டன், டி. சி.யில் அமைக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1915

    ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.

  2. 1916

    முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சிய இராணுவத்திற்குக் கட்டாயமாக ஆள்சேர்க்கும் திட்டத்திற்கான சட்டமூலத்தை பிரித்தானிய அரசு நிறைவேற்றியது.

  3. 1918

    பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

  4. 1924

    விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

  5. 1926

    ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.

  6. 1938

    நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் 900-நாள் லெனின்கிராட் முற்றுகை முடிவுக்கு வந்தது.

  8. 1945

    இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.

  9. 1951

    அணுகுண்டு சோதனை நெவாடாவில் ஆரம்பமானது.

  10. 1962

    1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.

  11. 1967

    பனிப்போர்: விண்வெளியில் அறுவாயுதத் தடை, நிலா மற்றும் ஏனைய வானியல்சார் பொருட்களை அமைதி வழிக்கும் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றுக்கிடையே வாசிங்டன், டி. சி.யில் கையெழுத்திடப்பட்டது.

  12. 1967

    எட்வேர்ட் வைட் உட்பட அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தனர்.

  13. 1973

    வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.

  14. 1996

    செருமனி முதல்தடவையாக பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாளை நினைவு கூர்ந்தது.

  15. 1996

    நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

  2. 2011

    அரேபிய வசந்தம்: 2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள் சனாவில் ஆரம்பமாயின.

  3. 2013

    பிரேசிலின் சாண்டா மரியா நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 242 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 21

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.