Skip to content

Popular

January 18 ஞாயிறு

On this day · January 18

வரலாற்றில் சனவரி 18

சனவரி 18 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 16 இறப்புகள் · 14

வரலாற்று நிகழ்வுகள்

Events · 32

4ஆம் நூற்றாண்டு

  1. 350

    மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.

5ஆம் நூற்றாண்டு

  1. 474

    ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1486

    இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமணம் புரிந்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1535

    எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் தலைநகர் லிமாவை நிர்மாணித்தார்..

  2. 1591

    சியாம் மன்னர் நரேசுவான் பர்மா இளவரசர் மின்சிட் சிராவுடன் தனியாக மோதி அவனைக் கொன்றார். இந்நாள் இன்றும் தாய்லாந்தில் அரச தாய் படைத்துறைகள் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1701

    புருசியாவின் மன்னாராக முதலாம் பிரெடெரிக் முடி சூடினார்.

  2. 1778

    அவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக் இதற்கு "சான்ட்விச் தீவுகள்" எனப் பெயரிட்டார்.

  3. 1788

    இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1806

    இடச்சு கேப் குடியேற்றம் பிரித்தானியாவிடம் சரணடைந்தது.

  2. 1824

    பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.

  3. 1871

    வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்லெம் அதன் முதலாவது மன்னனான்.

  4. 1896

    எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1911

    யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.

  2. 1919

    முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சு, வேர்சாயில் ஆரம்பமானது.

  3. 1929

    லியோன் திரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

  4. 1941

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் போரைத் தொடங்கியது.

  5. 1944

    இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.

  6. 1945

    இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கிராக்கோவ் நகரம் செஞ்சேனையினால் விடுவிக்கப்பட்டது.

  7. 1960

    அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில், வானூர்தி ஒன்று வயல் நிலமொன்றில் வீழ்ந்ததில் அதில் யனம் செய்த 50 பேரும் உயிரிழந்தனர்.

  8. 1960

    கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.

  9. 1969

    அமெரிக்க விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

  10. 1974

    இசுரேலுக்கும், எகிப்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து யோம் கிப்பூர்ப் போர் முடிவுக்கு வந்தது.

  11. 1976

    லெபனான் கிறித்தவர்களின் குடிப்படைகள் பெய்ரூட் கரந்தீனாவில் குறைந்தது 1,000 பேரைக் கொன்றனர்.

  12. 1977

    பொசுனியா எர்செகோவினாவில் யுகோசுலாவியாவின் பிரதமர் ஜெமால் பிஜேதிச், அவரது மனைவி, மற்றும் ஆறு பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.

  13. 1977

    ஆத்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் உயிரிழந்தனர்.

  14. 1993

    அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் மார்ட்டின் லூதர் கிங் நாள் அதிகாரபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

  15. 1995

    17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.

  16. 1997

    போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

  2. 2003

    ஆத்திரேலியா தலைநகர் கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.

  3. 2005

    உலகின் மிகப்பெரும் ஜெட் வானூர்தி ஏர்பஸ் ஏ380 பிரான்சின் துலூசில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  4. 2007

    மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் செருமனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 16

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 18 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.