Skip to content

Popular

January 16 வெள்ளி

On this day · January 16

வரலாற்றில் சனவரி 16

சனவரி 16 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 15 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 2

சனவரி 16 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 27

    கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.

10ஆம் நூற்றாண்டு

  1. 929

    குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது.

14ஆம் நூற்றாண்டு

  1. 1362

    வடகடலில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் இங்கிலாந்தின் கிழக்குக் கரை பெரும் சேதத்திற்குள்ளானது. ருங்கோல்ட் என்ற செருமனிய நகரம் அழிந்தது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1492

    எசுப்பானிய மொழியின் முதலாவது இலக்கண நூல் பேரரசி முதலாம் இசபெல்லாவிடம் கையளிக்கப்பட்டது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1547

    இளவரசர் நான்காம் இவான் உருசியாவின் 1-வது (சார்) பேரரசராக முடிசூடினார். 264-ஆண்டு கால மாசுக்கோ தன்னாட்சிப் பிரதேசம் உருசிய சாராட்சியாக மாறியது.

  2. 1556

    இரண்டாம் பிலிப்பு எசுப்பானியாவின் அரசராக முடிசூடினார்.

  3. 1572

    இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபையை மீளக் கொண்டுவருவதற்கு சதியில் ஈடுபட்டமைக்காக நோர்போக் கோமகன் தொதாம்சு ஓவார்டு மீது விசாரணை ஆரம்பமானது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1707

    இசுக்காட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து பெரிய பிரித்தானிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

  2. 1757

    நரேலா சமரில் மராட்டியப் பேரரசுப் படைகள் 5-000 படைகளைக் கொண்ட துராணிப் பேரரசைத் தோற்கடித்தது.

  3. 1761

    பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.

  4. 1777

    வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1862

    இங்கிலாந்து, நோர்தம்பலாந்து என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 204 பேர் உயிரிழந்தனர்.

  2. 1900

    சமோவா தீவுகளுக்கான உரிமையை விட்டுக் கொடுக்கும் ஐக்கிய இராச்சியத்தின் 1899 ஆங்கிலோ-செருமன் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1909

    ஏர்னஸ்ட் சாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.

  2. 1920

    உலக நாடுகள் சங்கத்தின் முதலாவது கூட்டம் பாரிசில் நடைபெற்றது.

  3. 1942

    அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் நடிகை கரோல் லம்பார்டு உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.

  4. 1945

    இட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.

  5. 1969

    செக்கோசிலோவாக்கியாவில் சோவியத் இராணுவம் முதல் வருடத்தில் மாணவர் எழுச்சியை அடக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யான் பலாக்கு என்ற செக் மாணவர் பிராகாவில் தீக்குளித்து மாண்டார்.

  6. 1969

    சோவியத் விண்கலங்கள் சோயுசு 4, சோயுசு 5 விண்கலங்கள் முதல் தடவையாக புவியின் சுற்றுப்பாதையில் விண்வெளிவீரர்களைப் பரிமாறிக் கொண்டன.

  7. 1979

    ஈரான் கடைசி மன்னர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.

  8. 1991

    ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.

  9. 1992

    எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

  10. 1993

    விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  2. 2003

    கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

  3. 2006

    எலன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியாவின் அரசுத்தலைவரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.

  4. 2008

    2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.

  5. 2008

    இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.

  6. 2016

    புர்க்கினா பாசோவில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 18

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.