Skip to content

Popular

January 31 சனி

On this day · January 31

வரலாற்றில் சனவரி 31

சனவரி 31 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 14 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2

சனவரி 31 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

4ஆம் நூற்றாண்டு

  1. 314

    மில்த்தியாதேசுக்குப் பின்னர் முதலாம் சில்வெஸ்தர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1208

    லேனா என்ற இடத்தில் சுவீடன் மன்னர் இரண்டாம் சிவெர்க்கருக்கும் இளவரசர் எரிக்குக்கும் இடையே இடம்பெற்ற போரில், எரிக் வென்றதை அடுத்து, அவன் இரண்டாம் எரிக் என்ற பெயரில் மன்னராக முடிசூடினான்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1606

    வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து மன்னர் முதலாம் யேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக கை பாக்சு என்பவன் தூக்கிலிடப்பட்டான்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1747

    பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1803

    கண்டிப் போர்கள்: கண்டி மன்னர் விக்கிரம ராஜசிங்கனுக்கு எதிரான போரை பிரித்தானியர் ஆரம்பித்தனர்.

  2. 1862

    ஆல்வன் கிரகாம் கிளார்க் சிரியசு பி என்ற வெண் குறுமீன் விண்மீனை 18.5 செமீ தொலைநோக்கி ஊடாகக் கண்டுபிடித்தார்.

  3. 1865

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க சட்டமன்றம் அடிமை முறையை ஒழிக்கும் 13-வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது.

  4. 1876

    அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1915

    முதலாம் உலகப் போர்; செருமனி உருசியாவுக்கு எதிராக முதற்தடவையாக நச்சு வாயுவை பொலிமோவ் சமரில் பயன்படுத்தியது.

  2. 1918

    இரண்டு பிரித்தானிய அரச கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து போர்க்கப்பல்கள் சேதமடைந்தன.

  3. 1928

    லியோன் திரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியம் நாடு கடத்தியது.

  4. 1937

    சோவியத் ஒன்றியத்தில் த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் 31 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

  5. 1942

    இரண்டாம் உலகப் போர்: மலேயா சமரில் கூட்டுப் படையினர் சப்பானியரிடம் தோற்றதை அடுத்து சிங்கப்பூருக்குப் பின்வாங்கினர்.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சப்பான் வசமிருந்த மார்சல் தீவுகளில் தரையிறங்கின.

  7. 1945

    அமெரிக்க இராணுவ வீரன் எடி சிலோவிக் என்பவன் இராணுவத்தில் இருந்து வெளியேறியமைக்காகத் தூக்கிலிடப்பட்டான்.

  8. 1945

    இரண்டாம் உலகப் போர்: போலந்தில் இசுடூதொஃப் வதை முகாமிலிருந்த 3,000 கைதிகள் நாட்சிகளினால் பால்ட்டிக் கடலினூடாக கட்டாயமாக நடத்திக் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  9. 1946

    பனிப்போர்: யுகோசுலாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாட்டில் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மாக்கடோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா என ஆறு குடியரசுகள் நிறுவப்பட்டன.

  10. 1950

    பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் ஐதரசன் குண்டு தயாரிப்பதற்கான திட்டத்தை அறிவித்தார்.

  11. 1953

    வடகடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் 300 பேரும் உயிரிழந்தனர்.

  12. 1957

    லாஸ் ஏஞ்சலசில் இரண்டு வானூர்திகள் மோதியதில் 8 பேர் வானிலும், இருவர் தரையிலும் உயிரிழந்தனர்.

  13. 1958

    விண்வெளிப் போட்டி: அமெரிக்காவின் முதலாவது வெற்றிகரமான செயற்கைக் கோள் எக்ஸ்புளோரர் 1 வான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டையைக் கண்டறிந்தது.

  14. 1961

    நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

  15. 1966

    சோவியத் ஒன்றியம் தனது லூனா திட்டத்தின் கீழ் லூனா 9 என்ற விண்கலத்தை ஏவியது.

  16. 1968

    வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் ஓசிமின் நகரில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர்.

  17. 1968

    நவூரு ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

  18. 1971

    அப்பல்லோ 14: விண்வெளி வீரர்கள் அலன் ஷெப்பர்ட், இசுடுவர்ட் ரூசா, எட்கார் மிட்செல், ஆகியோர் சாடர்ன் V ஏவுகலத்தில் நிலாவை நோக்கி சென்றனர்.

  19. 1980

    குவாத்தமாலாவில் எசுப்பானிய தூதரக முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.

  20. 1990

    சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மெக்டொனால்ட்சு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.

  21. 1996

    கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.

  22. 2000

    கலிபோர்னியாவில் எம்டி-83 விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயனம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

  2. 2009

    கென்யாவில் எண்ணெய்க் கசிவை அடுத்து தீப்பற்றியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 2018

    நீல நிலவு மற்றும் முழு நிலவு மறைப்பு இடம்பெற்றன.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · சனவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 31 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.