Skip to content

Popular

May 28 வியாழன்

On this day · May 28

வரலாற்றில் மே 28

மே 28 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 15 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 3

மே 28 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

16ஆம் நூற்றாண்டு

  1. 1503

    இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.

  2. 1533

    கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார்.

  3. 1588

    எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.

17ஆம் நூற்றாண்டு

  1. 1644

    இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இசுடான்லி தலைமையில் அரசுப் படைகள் 1,600 வரையான கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்தனர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1737

    வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1802

    குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் லூயி டெல்கிரே தலைமையில் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர்.

  2. 1830

    அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் அமெரிக்கப் பழங்குடிகளை அகற்றும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    உருசிய-சப்பானியப் போர்: சூசிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசியக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு சப்பானியர்களால் அழிக்கப்பட்டது.

  2. 1915

    சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து சூன் 5 இல் முடிவுக்கு வந்தது.

  3. 1918

    அசர்பைஜான் சனநாயகக் குடியரசு முதலாவது ஆர்மீனியக் குடியரசு ஆகியன விடுதலையை அறிவித்தன.

  4. 1926

    போர்த்துகலில் வன்முறையை அடக்க அங்கு தேசிய சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

  5. 1937

    போல்க்ஸ்வேகன், செருமானிய தானுந்து நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

  6. 1940

    இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் செருமனியிடம் சரணடைந்தது. பெல்ஜியம் சண்டை முடிவுக்கு வந்தது.

  7. 1940

    இரண்டாம் உலகப் போர்: நோர்வே, பிரான்சு, போலந்து, பிரித்தானியப் படைகள் நோர்வேயின் நார்விக் நகரைக் கைப்பற்றின.

  8. 1942

    இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஐட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1,800 பேரைக் கொன்று குவித்தனர்.

  9. 1948

    தென்னாப்பிரிக்காவின் பிரதமராக தானியேல் பிரான்சுவா மலான் தெரிவு செய்யப்பட்டார். இவர் பின்னர் இனவொதுக்கலை அமுல்படுத்தினார்.

  10. 1956

    பிரான்சுடன் இந்தியா கையொப்பமிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி, புதுச்சேரி ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது.

  11. 1958

    இலங்கை இனக் கலவரம், 1958: கல்கிசையில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர். தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.

  12. 1974

    வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிவடைந்தது.

  13. 1975

    15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

  14. 1977

    அமெரிக்காவின் கென்டக்கி, சவுத்கேட் என்ற இடத்தில் உணவு விடுதி ஒன்று தீப்பிடித்ததில் 165 பேர் உயிரிழந்தனர்.

  15. 1987

    மேற்கு செருமனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் என்பவர் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் 1988 ஆகத்து 13 இல் விடுவிக்கப்பட்டார்.

  16. 1991

    எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

  17. 1995

    உருசியாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,989 பேர் உயிரிழந்தனர், 750 பேர் காயமடைந்தனர்.

  18. 1998

    பாக்கித்தான் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியது. அமெரிக்கா, சப்பான் மற்றும் சில நாடுகள் பாக்கித்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

  19. 1999

    இத்தாலி, மிலன் நகரில், லியொனார்டோ டா வின்சியின் புகழ் பெற்ற இரவு இராவுணவு என்ற புகழ்பெற்ற ஓவியம் 22 ஆண்டுகள் புனரமைப்பின் பின்னர் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர்.

  2. 2008

    240-ஆண்டுகள் மன்னராட்சியின் பின்னர், நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

  3. 2010

    பாக்கித்தான், லாகூர் நகரில் இரண்டு மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஆராதனையின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

  4. 2010

    மேற்கு வங்கத்தில், ஞானேசுவரி விரைவுத் தொடர்வண்டி தடம் புரண்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

  5. 2011

    மால்ட்டாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், மணமுறிவுக்கு ஆதரவாக 53% மக்கள் வாக்களித்தனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 16

இம்மாத நாட்கள் · மே

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.