Skip to content

Popular

May 23 சனி

On this day · May 23

வரலாற்றில் மே 23

மே 23 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 13 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 3

மே 23 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

15ஆம் நூற்றாண்டு

  1. 1430

    ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.

  2. 1498

    திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1533

    இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1633

    இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1788

    தென் கரொலைனா அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 8-வது மாநிலமாக இணைந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1813

    தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று "விடுவிப்பாளர்" எனத் தன்னை அறிவித்தார்.

  2. 1829

    வியன்னாவில் சிரில் டேமியன் என்பவருக்கு அக்கார்டியனுக்கான காப்புரிமம் வழங்கப்பட்டது.

  3. 1844

    பாரசீக மதகுரு பாப் பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது. பகாய் சமயத்தவர் இந்நாளை புனித நாளாகக் கொண்டாடுகின்றனர்.

  4. 1846

    மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் மரியானோ பரேதசு அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1911

    நியூயார்க் பொது நூலகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

  2. 1915

    முதலாம் உலகப் போர்: இத்தாலி கூட்டுப் படைகளுடன் இணைந்தது.

  3. 1932

    பிரேசிலில் அரசுத்தலைவர் கெட்டூலியோ வர்காசுக்கு எதிரான போராட்டங்களில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  4. 1939

    அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இசுக்குவாலசு சோதனை ஓட்டத்தின் போது நியூ ஹாம்சயர் கரையில் மூழ்கியதில், 24 பேர் உயிரிழந்தனர்.

  5. 1945

    இரண்டாம் உலகப் போர்: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிச் இம்லர் நேச நாடுகளின் கைதியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.

  6. 1948

    இசுரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் தோமசு வாசென் எருசலேம் நகரில் கொலை செய்யப்பட்டார்.

  7. 1949

    பனிப்போர்: மேற்கு செருமனி என்ற நாடு அமைக்கப்பட்டது.

  8. 1951

    திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.

  9. 1958

    ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செயற்கைக்கோள் எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.

  10. 1960

    சிலியில் முதல் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 61 பேர் உயிரிழந்தனர்.

  11. 1992

    இத்தாலியின் மாஃபியாக்களுக்கு எதிரான நீதிபதி கியோவானி பால்க்கோனி, அவரது மனைவி உட்பட ஐவர் சிசிலியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  12. 1993

    எரித்திரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

  13. 1995

    ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

  14. 1998

    வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.

  2. 2008

    இலங்கை, கிளிநொச்சி மாவட்டம், முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

  3. 2008

    அனைத்துலக நீதிமன்றம் "நடுப் பாறைகள்" என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29-ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.

  4. 2014

    காங்கோ சனநாயகக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் செருமைன் கட்டாங்கா புரிந்த போர்க்குற்றங்களுக்காக அவருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தது.

  5. 2016

    இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் யெமன், ஏடன் நகரில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலைத் தாக்குதல்களில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

  6. 2016

    இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் சிரியாவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 184 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் வரையானோர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 13

இறப்புகள்

Deaths · 18

இம்மாத நாட்கள் · மே

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.