Skip to content

Popular

May 20 புதன்

On this day · May 20

வரலாற்றில் மே 20

மே 20 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 18 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 3

மே 20 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 35

4ஆம் நூற்றாண்டு

  1. 325

    கிறித்தவத் திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச் சங்கம், நிக்கேயா பேரவை அமைக்கப்பட்டது.

13ஆம் நூற்றாண்டு

  1. 1217

    இங்கிலாந்து லிங்கன் நகரப் போரில், பிரான்சின் இளவரசர் லூயி (பின்னாளைய எட்டாம் லூயி) பெம்புரோக் பிரபு வில்லியம் மார்சலிடம் தோல்வியடைந்தார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1497

    ஜான் கபோட் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இருந்து மேற்கு நோக்கிய வழியைக் கன்டுபிடிப்பதற்காக மெத்தியூ என்ற கப்பலில் புறப்பட்டார்.

  2. 1498

    போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1521

    பாம்பெலூனா நகரில் இடம்பெற்ற போரில் லொயோலா இஞ்ஞாசி காயமடைந்தார்.

  2. 1570

    உலகின் முதலாவது நவீன நிலப்படத் தொகுப்பை நிலப்படவரைவியலாளர் ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1605

    உரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் மதப்பரப்புனராக கோவா வந்து சேர்ந்தார்.

  2. 1631

    முப்பதாண்டுப் போர்: செருமனியின் மாக்டபூர்க் நகரை புனித உரோமைப் பேரரசு கைப்பற்றி அந்நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1802

    பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமை முறையை மீண்டும் கொண்டுவந்தான்.

  2. 1813

    நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் செருமனியின் சாக்சனி நகரில் நுழைந்து உருசியா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.

  3. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: கென்டக்கி மாநிலம் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. செப்டம்பர் 3 இல் கூட்டமைப்புப் படைகள் ஆக்கிரமிக்கும் வரை இந்நிலை நீடித்தது. வட கரொலைனா ஒன்றியத்தில் இருந்து விலகியது.

  4. 1869

    யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.

  5. 1873

    லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.

  6. 1875

    அனைத்துலக முறை அலகுகள் முறைமையை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 17 நாடுகள் கையெழுத்திட்டன.

  7. 1882

    செருமானியப் பேரரசு, ஆத்திரியா-அங்கேரி, இத்தாலி இராச்சியம் ஆகியன முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.

  8. 1883

    கிரக்கத்தோவா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் 36,000 பேர் உயிரிழந்தனர்.

  9. 1891

    திரைப்பட வரலாறு: தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1902

    ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.

  2. 1927

    மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசின் ஹெஜாஸ், நாச்து இராச்சியங்கள் மீதான இறைமையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது. இவை பின்னர் சவூதி அரேபியா இராச்சியமானது.

  3. 1940

    பெரும் இன அழிப்பு: முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.

  4. 1941

    இரண்டாம் உலகப் போர்: கிரீட் சண்டை: செருமனியப் படைகள் கிரீட் நகரைக் கைப்பற்றின.

  5. 1948

    சீனக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக சங் கை செக் தேர்தெடுக்கப்பட்டார்.

  6. 1956

    ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஐதரசன் குண்டு பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் போடப்பட்டது.

  7. 1964

    பிரபஞ்ச நுண்ணலைக் கதிர்வீச்சை இராபெர்ட் உட்ரோ வில்சன் கண்டுபிடித்தார்.

  8. 1965

    எகிப்தில் கெய்ரோ நகரில் பாக்கித்தானிய வானூர்தி தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

  9. 1971

    பாக்கித்தான் படைகள் சுக்நகர் என்ற இடத்தில் வங்காள இந்துக்களைப் படுகொலை செய்தனர்.

  10. 1980

    கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

  11. 1983

    எயிட்சு நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி தீ நுண்மங்களைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.

  12. 1983

    தென்னாப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவில் உம்கொன்ரோ வெய் சிசுவே இயக்கத்தினரால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர், 217 பேர் காயமடைந்தனர்.

  13. 1985

    வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கியூபாவுக்கான வானொலி சேவையை ஆரம்பித்தது.

  14. 1989

    1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்: சீனாவில் இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

  15. 1990

    உருமேனியாவில் கம்யூனிச ஆட்சிக்குப் பின்னர் முதல்தடவையாக அரசுத்தலைவர், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.

  2. 2012

    வடக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 27 பேர் உயிரிழந்தன்ர்.

  3. 2013

    அமெரிக்காவில் ஒக்லகோமா நகரில் வீசிய சுழற்காற்றினால் 24 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 10

இம்மாத நாட்கள் · மே

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 20 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.