Skip to content

Popular

May 8 வெள்ளி

On this day · May 8

வரலாற்றில் மே 8

மே 8 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 25 பிறப்புகள் · 18 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 5

மே 8 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 25

15ஆம் நூற்றாண்டு

  1. 1450

    இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1794

    பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1821

    கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.

  2. 1842

    பாரிசு நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீப்பிடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

  3. 1886

    ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை விற்பனைக்கு விட்டார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1902

    கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் உயிரிழந்தனர்.

  2. 1912

    பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

  3. 1921

    உருமேனியாவில் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

  4. 1927

    பாரிசில் இருந்து நியூ யார்க் வரை வானூர்தியில் முதல்தடவையாக இடைத்தங்கல் எதுவுமின்றி பறந்து சாதனை படைக்க முயன்ற பிரான்சியப் போர் வீரர்கள் சார்லசு நுங்கெசர், பிரான்சுவா கோலி ஆகியோர் இடையில் காணாமல் போயினர்.

  5. 1933

    மகாத்மா காந்தி தலித் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

  6. 1941

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வான்படை இங்கிலாந்தின் நோட்டிங்காம், டார்பி நகரங்கள் மீது குண்டுகளை வீசியது.

  7. 1942

    இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசின் வானூர்தி தாங்கிக் கப்பல் அமெரிக்கக் கடற்படையின் லெக்சிங்டன் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அடுத்து பவளக் கடல் சமர் முடிவுக்கு வந்தது.

  8. 1942

    இரண்டாம் உலகப் போர்: கொக்கோசு தீவுகளில் ஓர்சுபரோ தீவில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை அரண்காவல் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சி முறியடிக்கப்பட்டு மூன்று இலங்கையர் தூக்கிலிடப்பட்டனர். மேலும் எட்டு பேருக்கு 3-7 ஆண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

  9. 1945

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் மேற்குப் பகுதிப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.

  10. 1945

    அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.

  11. 1946

    எசுத்தோனிய பள்ளி மாணவிகள் இருவர் தாலின் நகரில் அமைக்கப்பட்டிருந்த சோவியத் நினைவகத்தைத் தகர்த்தனர்.

  12. 1963

    கத்தோலிக்க அரசுத்தலைவர் நியோ டின் தியெம் கீழிருந்த தென் வியட்நாம் படையினர் வெசாக் நாளில் பௌத்தக் கொடி ஏற்றுவதற்கிருந்த தடையை மீறிய பௌத்தர்கள் மீது சுட்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

  13. 1978

    ரைன்ஹோல்ட் மெஸ்னெர், பீட்டர் எபெலர் இருவரும் முதற்தடவையாக ஆக்சிசன் ஊக்கி எதுவும் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் மனிதர் எனற சாதனையை ஏற்படுத்தினர்.

  14. 1980

    பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

  15. 1984

    டெனிசு லோர்ட்டி என்ற இராணுவ வீரர் கியூபெக் சட்டமன்றத்தினுள் புகுந்து சுட்டதில் மூவர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்தனர்.

  16. 1987

    வட அயர்லாந்து, லோகல் என்ற இடத்தில் எட்டு ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

  17. 1997

    சீனாவில் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர்.

  18. 1998

    இலங்கையின் தெற்கே திக்குவல்லையில் சிங்களவருக்கும் முசுலிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.

  2. 2017

    தமிழ் விக்கிப்பீடியாவில் 100,000-வது கட்டுரை எழுதப்பட்டது.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · மே

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.