Skip to content

Popular

May 15 வெள்ளி

On this day · May 15

வரலாற்றில் மே 15

மே 15 அன்று நிகழ்ந்த 80 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 50 பிறப்புகள் · 18 இறப்புகள் · 7 சிறப்பு நாட்கள் · 5

மே 15 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 50

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 495

    மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது.

3ஆம் நூற்றாண்டு

  1. 221

    சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார்.

4ஆம் நூற்றாண்டு

  1. 392

    உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார்.

10ஆம் நூற்றாண்டு

  1. 908

    மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1536

    இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

  2. 1567

    ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பொத்வெல் பிரபு யேம்சு எப்பர்ன் என்பவரை மூன்றாவது கணவராகத் திருமணம் புரிந்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1618

    யோகான்னசு கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.

  2. 1648

    வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1718

    உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.

  2. 1730

    ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமராக ராபர்ட் வால்போல் பதவியேற்றார்.

  3. 1776

    அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான முன்மொழிவுகளைத் தருமாறு 5-வது வெர்ஜீனியப் பேரவை காங்கிரசு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது.

  4. 1792

    பிரான்சு சார்தீனிய இராச்சியத்துடன் போரை ஆரம்பித்தது.

  5. 1796

    நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின.

  6. 1800

    ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1811

    பரகுவை எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  2. 1848

    1848 புரட்சிகள்: போலந்து, ஆப்சுபர்க் கலீசியாவில் பண்ணையடிமை ஒழிக்கப்பட்டது.

  3. 1849

    இரண்டு சிசிலிகளின் படைகள் பலெர்மோவைக் கைப்பற்றி, சிசிலியின் குடியரசு அரசைக் கலைத்தன.

  4. 1850

    கலிபோர்னியாவின் லேக் மாவட்டத்தில் பெருந்தொகையான போமோ இந்தியப் பழங்குடிகள் அமெரிக்க இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

  5. 1851

    நான்காவது இராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.

  6. 1891

    திருத்தந்தை, பதின்மூன்றாம் லியோ தொழிலாழர் உரிமை, நிலவுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான ஆணையைப் பிறப்பித்தார்.

  7. 1897

    கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1904

    உருசிய-சப்பானியப் போர்: சப்பானின் போர்க்கப்பல்கள் ஆட்சூசி, யாசிமா ஆகியன 496 பேருடன் உருசியர்களினால் மூழ்கடிக்கப்பட்டன.

  2. 1911

    மெக்சிக்கோவில் தொரெயோன் நகரில் 300 இற்கும் அதிகமான சீனக் குடியேறிகள் மெக்சிக்கோ புரட்சிவாதிகளால் கொல்லப்பட்டனர்.

  3. 1919

    துருக்கியின் இசுமீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.

  4. 1928

    வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் முதற்தடவையாக பிளேன் கிரேசி என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

  5. 1929

    ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

  6. 1932

    இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து சப்பானியப் பிரதமர் இனுக்காய் சுயோசி கொல்லப்பட்டார்.

  7. 1934

    கார்லிசு உல்மானிசு லாத்வியாவில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார்.

  8. 1935

    மொஸ்கோவில் சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.

  9. 1940

    இரண்டாம் உலகப் போர்: பெரும் சமருக்குப் பின்னர் இடச்சுப் படைகள் செருமானியப் படைகளிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து செருமனியின் வசம் இருந்தது.

  10. 1940

    மெக்டொனால்ட்சு தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் சான் பெர்னாதீனோவில் ஆரம்பித்தது.

  11. 1941

    பிரித்தானிய மற்றும் நட்புப் படைகளின் முதலாவது தாரை வானூர்தி சேவைக்கு விடப்பட்டது.

  12. 1943

    ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்நாடு) கலைத்தார்.

  13. 1948

    பலத்தீன் மீதான பிரித்தானியக் கட்டளை முடிவுக்கு வந்ததை அடுத்து, இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவூதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.

  14. 1955

    உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.

  15. 1957

    பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.

  16. 1958

    சோவியத்தின் இசுப்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.

  17. 1960

    சோவியத்தின் இசுப்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.

  18. 1963

    நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார். இவரே தனியாளாக விண்வெளிக்குச் சென்ற கடைசி அமெரிக்கர் ஆவார்.

  19. 1972

    1945 முதல் அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இரியூக்கியூ தீவுகள் மீண்டும் சப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.

  20. 1974

    பாலத்தீன விடுதலைக்கான சனநாயக முன்னணிப் போராளிகள் இசுரேலியப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தாக்கியதில் 22 மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.

  21. 1976

    உக்ரைன், வினீத்சியாவிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர்.

  22. 1985

    குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

  23. 1988

    ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில் வெளியேற்ற ஆரம்பித்தது.

  24. 1991

    எடித் கிரசான் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.

  25. 1996

    ஈழப்போர்: இலங்கைத் தரைப்படை யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக மூன்றாம் சூரியக்கதிர் நடவடிக்கையை ஆரம்பித்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.

  2. 2006

    வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  3. 2008

    கலிபோர்னியா ஒருபால் திருமணத்தை அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமானது. 2004 இல் மாசச்சூசெட்ஸ் அங்கீகரித்திருந்தது.

  4. 2013

    ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 7

இம்மாத நாட்கள் · மே

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.