Skip to content

Popular

May 29 வெள்ளி

On this day · May 29

வரலாற்றில் மே 29

மே 29 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 14 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 2

மே 29 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

4ஆம் நூற்றாண்டு

  1. 363

    உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை.

14ஆம் நூற்றாண்டு

  1. 1328

    நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1416

    கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது.

  2. 1453

    கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1660

    இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.

  2. 1677

    வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1780

    அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை "பனஸ்ட்ரே டார்லெட்டன்" தலைமையிலான படைகள் கொன்றனர்.

  2. 1790

    ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  3. 1798

    300 முதல் 500 வரையான ஐக்கிய அயர்லாந்து கிளர்ச்சிவாதிகள் பிரித்தானிய இராணுவத்தினரால் அயர்லாந்தில் கொல்லப்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1848

    விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  2. 1864

    மெக்சிக்கோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தார்.

  3. 1867

    ஆத்திரிய-அங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.

  4. 1868

    செர்பியாவின் இளவரசர் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.

  5. 1869

    பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.

  6. 1886

    மருந்தியலாளர் ஜான் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1903

    செர்பியா மன்னர் முதலாம் அலெக்சாந்தர், அராசி திராகா இருவரும் பெல்கிறேட் நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.

  2. 1914

    புனித லாரன்சு வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,012 பேர் உயிரிழந்தனர்.

  3. 1919

    ஐன்சுடைனின் பொதுச் சார்புக் கோட்பாடு ஆர்த்தர் எடிங்டன் என்பவரால் சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.

  4. 1931

    பெனிட்டோ முசோலினியைக் கொலை செய்ய முயன்றதாக அமெரிக்கரான மிச்செல் சிரு என்பவரை இத்தாலிய இராணுவம் சுட்டுக் கொன்று மரணதண்டனைக்குட்படுத்தியது.

  5. 1950

    வட அமெரிக்காவைச் சுற்றி வந்த முதலாவது கப்பல் புனித ராக் கனடா, ஹாலிஃபாக்ஸ் நகரை வந்தடைந்தது.

  6. 1953

    எட்மண்ட் இல்லரி, செர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.

  7. 1964

    அரபு நாடுகள் கூட்டமைப்பு பாலத்தீனப் பிரச்சினை குறித்து விவாதிக்க கிழக்கு எருசலேமில் கூடியது. இது பலத்தீன விடுதலை இயக்கத்தை அமைக்க இது வழி கோலியது.

  8. 1972

    டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று சப்பானியர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

  9. 1982

    இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

  10. 1982

    போக்லாந்து போர்: பிரித்தானியப் படைகள் அர்கெந்தீனாவை கூஸ் கிறீன் சண்டையில் தோற்கடித்தது.

  11. 1985

    பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் அரங்கின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

  12. 1988

    அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் தலைவர் கொர்பச்சோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு மாஸ்கோ வந்து சேர்ந்தார்.

  13. 1990

    போரிஸ் யெல்ட்சின் சோவியத் உருசியாவின் அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.

  14. 1999

    டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.

  15. 1999

    16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அரசுத்தலைவரை மக்கள் தெரிவு செய்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

  2. 2008

    ஐசுலாந்தில் 6.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 30 பேர் காயமடைந்தனர்.

  3. 2012

    இத்தாலியின் வடக்கே 5.8-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 24 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 16

இம்மாத நாட்கள் · மே

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.