Skip to content

Popular

May 13 புதன்

On this day · May 13

வரலாற்றில் மே 13

மே 13 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 20 இறப்புகள் · 11

வரலாற்று நிகழ்வுகள்

Events · 38

16ஆம் நூற்றாண்டு

  1. 1515

    பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார்.

  2. 1568

    ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன.

17ஆம் நூற்றாண்டு

  1. 1648

    தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

  2. 1656

    ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1765

    யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார்.

  2. 1787

    ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்து போர்ட்ஸ்மவுத் துறையை விட்டுப் புறப்பட்டார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1830

    எக்குவாடோர் கொலம்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

  2. 1846

    மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.

  3. 1861

    பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் வின்சர் நகரில் அவதானிக்கப்பட்டது.

  4. 1861

    பாக்கித்தானில் முதலாவது தொடருந்து சேவை கராச்சி முதல் கோத்ரி வரை ஆரம்பிக்கப்பட்டது.

  5. 1880

    நியூ செர்சியில் மென்லோ பூங்காவில் தாமசு ஆல்வா எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.

  6. 1888

    பிரேசில் பேரரசு அடிமைமுறையை இல்லாதொழித்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1939

    முதலாவது எஃப்எம் வானொலி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் கனெடிகட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  2. 1940

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் இராணுவம் மியூசே ஆற்றைத் தாண்டி பிரான்சினுள் புகுந்தது. முற்றுகை ஆரம்பமானது.

  3. 1940

    இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாட்சி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்லெல்மினா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.

  4. 1943

    இரண்டாம் உலகப் போர்: வட ஆப்பிரிக்காவில் செருமனிய, இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.

  5. 1952

    இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.

  6. 1954

    சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.

  7. 1958

    அல்ஜியர்சில் பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் சிலர் இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர்.

  8. 1960

    உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.

  9. 1967

    சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.

  10. 1969

    மலேசியாவில் கோலாலம்பூரில் சீன மலேசியர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.

  11. 1971

    வங்காளதேசம், தெம்ரா நகரில் 900 இற்கும் அதிகமான வங்காள இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

  12. 1972

    சப்பான், ஒசாக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 118 பேர் உயிரிழந்தனர்.

  13. 1981

    ரோம் நகரில் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் திருத்தந்தை காயமடைந்தார்.

  14. 1985

    பிலடெல்பியாவில் மூவ் என அவைக்கப்படும் கறுப்பின விடுதலைக் குழு ஒன்றின் தலைமையகம் மீது காவல்துறையினர் குண்டு வைத்துத் தகர்த்ததில், ஐந்து சிறுவரக்ள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

  15. 1989

    சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

  16. 1996

    வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.

  17. 1997

    இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

  18. 1998

    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.

  19. 1998

    இந்தியா மே 11 இற்குப் பின்னர் மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2006

    அல்லைப்பிட்டிப் படுகொலைகள்: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.

  3. 2006

    திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.

  4. 2007

    திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணக்கத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.

  5. 2011

    பாக்கித்தானில் சார்சாதா மாவட்டத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், 98 பேர் கொல்லப்பட்டனர், 140 பேர் காயமடைந்தனர்.

  6. 2014

    துருக்கியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 301 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  7. 2018

    இந்தோனேசியாம் சுராபாயாவில் மூன்று கிறித்தவத் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 20

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · மே

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.