Skip to content

Popular

February 11 புதன்

On this day · February 11

வரலாற்றில் பெப்ரவரி 11

பெப்ரவரி 11 அன்று நிகழ்ந்த 85 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 39 பிறப்புகள் · 13 இறப்புகள் · 28 சிறப்பு நாட்கள் · 5

பெப்ரவரி 11 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 39

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 660

    யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள்.

1ஆம் நூற்றாண்டு

  1. 55

    உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது.

3ஆம் நூற்றாண்டு

  1. 244

    சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1534

    இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1626

    எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார்.

  2. 1640

    இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.

  3. 1659

    கோபனாவன் மீது சுவீடன் படைகள் நடத்திய தாக்குதல் பெரும் இழப்புடன் முறியடிக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1790

    அடிமை முறையை ஒழிக்குமாறு நண்பர்களின் சமய சமூகம் அமெரிக்கக் காங்கிரசில் முறையிட்டது.

  2. 1794

    அமெரிக்க மேலவையின் முதலாவது அமர்வு பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1802

    சின்ன மருது மகன் துரைச்சாமி உட்பட 73 பேர் மலாயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) நாடு கடத்தப்பட்டனர்.

  2. 1823

    மால்டாவில் வல்லெட்டா நகரில் கிறித்தவக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட விழா நெரிசலில் 110 மாணவர்கள் உயிரிழந்தனர்.

  3. 1826

    இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

  4. 1855

    காசா ஐலு எத்தியோப்பியாவின் பேரரசராக மூன்றாம் தெவோதிரசு என்ற பெயரில் முடிசூடினார்.

  5. 1856

    அவத் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியது. அவத் மன்னர் வாஜித் அலி சா கைது செய்யப்பட்டு பின்னர் கொல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.

  6. 1858

    பெர்னதெத் சுபீரு லூர்து அன்னையை முதற்தடவையாகக் கண்ணுற்ற நிகழ்வு பிரான்சின் லூர்து நகரில் இடம்பெற்றது.

  7. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமைகள் விவகாரத்தில் எந்தவொரு மாநிலத்திலும் நேரடியாகத் தலையிடுவதில்லை என அமெரிக்கக் கீழவை ஏகமனதாக முடிவு செய்தது.

  8. 1873

    எசுப்பானிய மன்னர் முதலாம் அமேதியோ முடி துறந்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1929

    வத்திக்கான் நகர் உருவாக்குவதற்கான உடன்பாட்டை இத்தாலியும் திரு ஆட்சிப்பீடமும் எட்டின.

  2. 1933

    மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

  3. 1938

    பிபிசி தொலைக்காட்சி தனது முதலாவது அறிபுனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

  4. 1943

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஐரோப்பாவில் நேச நாடுகளின் இராணுவத்திற்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  5. 1953

    சோவியத் ஒன்றியம் இசுரேல் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது.

  6. 1959

    தெற்கு அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு (பின்னர் தெற்கு யேமன்) ஐக்கிய இராச்சியத்தின் காப்பு நாடாக உருவாக்கப்பட்டது.

  7. 1960

    சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

  8. 1964

    கிரேக்கரும் துருக்கியரும் சைப்பிரசின் லிமாசோல் நகரில் போரிட்டனர்.

  9. 1971

    பனிப்போர்: பன்னாட்டுக் கடற்பரப்பில் அணுக்கரு ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் கையெழுத்திட்டன.

  10. 1973

    வியட்நாம் போர்: வியட்நாமில் இருந்து முதல் தொகுதி அமெரிக்கப் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

  11. 1978

    அரிசுட்டாட்டில், வில்லியம் சேக்சுபியர், சார்லஸ் டிக்கின்ஸ் ஆகியோரின் ஆக்கங்களுக்கான தடையை சீனா தளர்த்தியது.

  12. 1979

    அயத்தொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானியப் புரட்சி வெற்றி பெற்றது.

  13. 1990

    27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா கேப் டவுன் விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றார்.

  14. 1996

    குமாரபுரம் படுகொலைகள்: இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

  15. 1997

    ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைப் பழுது பார்க்கும் டிஸ்கவரி விண்ணோடம் புறப்பட்டது.

  16. 1999

    புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தை தாண்டிச் சென்றது. இவ்வாறான நிகழ்வு மீண்டும் 228 ஆண்டுகளின் பின்னரே நிகழும் என எதிர்வு கூறப்படுகிறது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2008

    கிழக்குத் திமோர் கிளர்ச்சிப் படைகளின் தாக்குதலில் அரசுத்தலைவர் ஒசே ரமோசு-ஓர்ட்டா படுகாயமடைந்தார். கிளர்ச்சித் தலைவர் அல்பிரடோ ரெய்னார்டோ கொல்லப்பட்டார்.

  2. 2011

    அரேபிய வசந்தம்: ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக் கோரி எகிப்தியப் புரட்சி ஆரம்பமானது.

  3. 2013

    திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மூப்பு காரணமாக 2013 பெப்ரவரி 28 இல் பணி துறப்பார் என வத்திக்கான் அறிவித்தது.

  4. 2014

    அல்சீரியாவின் கிழக்கே சரக்கு விமானம் ஒன்று மலைப்பகுதி ஒன்றில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

  5. 2017

    வட கொரியா யப்பான் கடல் மேலாக ஏவுகணையை ஏவிப் பரிசோதித்தது.

  6. 2018

    சரதோவ் எயர்லைன்சு விமானம் 703 மாஸ்கோ அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 71 பேரும் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 13

இறப்புகள்

Deaths · 28

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 11 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.