Skip to content

Popular

February 22 ஞாயிறு

On this day · February 22

வரலாற்றில் பெப்ரவரி 22

பெப்ரவரி 22 அன்று நிகழ்ந்த 74 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 21 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 2

பெப்ரவரி 22 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 38

8ஆம் நூற்றாண்டு

  1. 705

    பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது.

14ஆம் நூற்றாண்டு

  1. 1371

    இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1495

    பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1651

    செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர்.

  2. 1658

    இடச்சுக்காரரினால் இலங்கையின் மன்னார் நகரம் கைப்பற்றப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1797

    பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பு வேல்சின் பிசுகார்டு நகரில் பிரெஞ்சுப் படைகளால் மேற்கொள்ளப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1819

    எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.

  2. 1847

    மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.

  3. 1848

    பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிரான பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.

  4. 1853

    வாசிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் மிசோரி, செயின்ட் லூயிசில் ஆரம்பிக்கப்பட்டது.

  5. 1862

    ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாக வர்ஜீனியா, ரிச்மண்ட் நகரில் பொறுப்பேற்றார்.

  6. 1882

    சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.

  7. 1889

    அமெரிக்க அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மொன்ட்டானா, வாசிங்டன் ஆகியவற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்.

  8. 1899

    பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக முதன் முதலாகத் தாக்குதலைத் தொடுத்தன. ஆனாலும், மணிலா நகரை அமெரிக்கர்களிடம் இருந்து கைப்பற்றத் தவறியது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1907

    பேடன் பவல் முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.

  2. 1909

    கனெடிக்கட் கப்பலின் தலைமையிலான 16 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தமது உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பின.

  3. 1921

    உருசியப் படையினர் மங்கோலியாவில் இருந்து சீனர்களை வெளியேற்றி, போகடு கானை மங்கோலியாவின் பேரரசனாக அறிவித்தனர்.

  4. 1924

    கால்வின் கூலிஜ் வெள்ளை மாளிகையில் இருந்து வானொலி மூலம் உரையாற்றிய முதலாவது அமெரிக்கத் தலைவர் ஆனார்.

  5. 1942

    இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.

  6. 1943

    இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியில் சோபி சோல் உட்பட வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் தவறுதலாக நான்கு இடச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800 இற்கும் அதிகமானோர் இறந்தனர்.

  8. 1958

    எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.

  9. 1961

    உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.

  10. 1969

    பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.

  11. 1972

    அதிகாரபூர்வ ஐரியக் குடியரசு இராணுவம் இங்கிலாந்து, ஆம்ப்சயரில் உள்ள ஆல்டர்சொட் இராணுவப் பாசறையில் வாகனக் குண்டுவெடிப்பை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டு, 19 பேர் காயமடைந்தனர்.

  12. 1974

    பாக்கித்தான், லாகூரில், நடைபெற்ற இசுலாமியக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் 37 நாடுகளும், 22 அரசுத்தலைவர்களும் பங்குபற்றினர். இம்மாநாட்டில் வங்காளதேசம் அங்கீகரிக்கப்பட்டது.

  13. 1974

    ரிச்சார்ட் நிக்சனைப் படுகொலை செய்யும் நோக்கில் வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக வாசிங்டன் பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் ஒன்றைக் கடத்த முற்பட்ட சாமுவேல் பிக் என்பவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

  14. 1979

    சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

  15. 1986

    பிலிப்பீன்சில் மக்கள் புரட்சி வெடித்தது.

  16. 1997

    டோலி என்ற ஆடு வெற்றிகரமாக படியெடுக்கப்பட்டதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாசு சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

  2. 2002

    இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கையெழுத்திடப்பட்டது.

  3. 2005

    ஈரானில் கெர்மான் மாகாணத்தில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 612 பேர் உயிரிழந்தனர்.

  4. 2006

    பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.

  5. 2011

    நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 185 பேர் உயிரிழந்தனர்.

  6. 2012

    அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 51 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.

  7. 2014

    உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கெதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 328–0 வாக்குகளால் வெற்றியடைந்தது.

  8. 2015

    பத்மா நதியில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 21

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 22 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.