Skip to content

Popular

February 19 வியாழன்

On this day · February 19

வரலாற்றில் பெப்ரவரி 19

பெப்ரவரி 19 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 15 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 1

பெப்ரவரி 19 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

4ஆம் நூற்றாண்டு

  1. 356

    பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1594

    போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார்.

  2. 1600

    பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1649

    இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது.

  2. 1674

    இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1807

    அமெரிக்காவின் முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆரன் பர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

  2. 1815

    கண்டிப் போர்கள்: கண்டியின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் தூம்பறை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.

  3. 1876

    யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது.

  4. 1878

    கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமசு ஆல்வா எடிசன் பெற்றார்.

  5. 1884

    60 இற்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின.

20ஆம் நூற்றாண்டு

  1. 1913

    பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே.

  2. 1915

    முதலாம் உலகப் போர்: தார்தனெல்சு நீரிணை மீதான முதலாவது கடற்படைத் தாக்குதல் ஆரம்பமானது. ஆங்கிலோ-பிரெஞ்சுக் கூட்டுப் படைகள் உதுமானியப் படைகள் மீது கலிப்பொலி கரையோரப் பகுதிகளில் குண்டுகளை வீசின. கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.

  3. 1942

    இரண்டாம் உலகப் போர்: சப்பானிய அமெரிக்கர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் உத்தரவிட்டார்.

  4. 1942

    இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 சப்பானியப் போர் விமானங்கள் ஆத்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.

  5. 1943

    இரண்டாம் உலகப் போர்: தூனிசியாவில் கேசரைன் கணவாய் சண்டை ஆரம்பமானது.

  6. 1945

    இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை: 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் சப்பானின் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.

  7. 1948

    விடுதலைக்காகப் போராடும் தென்கிழக்காசியாவின் இளையோர் மற்றும் மாணவர் மாநாடு கல்கத்தாவில் ஆரம்பமானது.

  8. 1954

    கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.

  9. 1959

    ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது. சைப்பிரசு அதிகாரபூர்வமாக 1960 ஆகத்து 16 இல் விடுதலை பெற்ற நாடாகியது.

  10. 1965

    வியட்நாம் குடியரசு இராணுவத் தளபதி பாம் ஙொக் தாவோ, வடக்கு வியட்நாம் வியட் மின் கம்யூனிச உளவாளியுடன் இணைந்து (அனைவரும் கத்தோலிக்கர்கள்) தெற்கு வியட்நாமில் பௌத்தரான நியூவென் கானின் ஆட்சிக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வியடைந்தனர்.

  11. 1978

    சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அனுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.

  12. 1985

    வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார்.

  13. 1985

    எசுப்பானியாவின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.

  14. 1986

    சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.

  15. 1986

    உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது.

  2. 2003

    ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.

  3. 2006

    மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மெத்தேன் வெடிப்பு ஏற்பட்டதில் 65 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  4. 2012

    மெக்சிக்கோவில் சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 17

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.