Skip to content

Popular

February 4 புதன்

On this day · February 4

வரலாற்றில் பெப்ரவரி 4

பெப்ரவரி 4 அன்று நிகழ்ந்த 75 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 15 இறப்புகள் · 19 சிறப்பு நாட்கள் · 3

பெப்ரவரி 4 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 38

3ஆம் நூற்றாண்டு

  1. 211

    உரோமைப் பேரரசர் செப்டிமசு செவெரசு இறந்தார். தமக்கிடையே சண்டை பிடிக்கும் அவரது இரண்டு மகன்களின் கட்டுப்பாட்டில் பேரரசு வந்தது.

10ஆம் நூற்றாண்டு

  1. 960

    சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.

12ஆம் நூற்றாண்டு

  1. 1169

    சிசிலியை நிலநடுக்கம் தாக்கியதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தோ அல்லது இறந்தோ போயினர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1488

    பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் முதலாவது ஐரோப்பியக் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1555

    ஜான் ரொஜர்சு தீயிட்டுக் கொல்லப்பட்டார். இவரே இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கீழ் முதலாவது சீர்திருத்தத் திருச்சபை ஆங்கிலேயத் தியாகியானவர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1703

    தோக்கியோவில் 46 சாமுராய்கள் தமது தலைவரின் இறப்பை ஈடு செய்யும் பொருட்டு சடங்குத் தற்கொலை செய்து கொண்டனர்.

  2. 1783

    ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.

  3. 1789

    ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

  4. 1794

    முதல் பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும் 1802 இல் பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளில் aடிமை முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.

  5. 1797

    எக்குவதோரில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1810

    கரிபியன் தீவுகளான குவாதலூப்பு பிரித்தானிய அரச கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

  2. 1834

    இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக கொழும்பு ஒப்சேர்வர் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

  3. 1859

    கிரேக்க விவிலியத்தின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

  4. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: மான்ட்கமரியில், பிரிந்து சென்ற ஆறு அமெரிக்க மாநிலங்கள் இணைந்து அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கின.

  5. 1899

    பிலிப்பைன்-அமெரிக்கப் போர் மணிலா சமருடன் ஆரம்பமாகியது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1932

    இரண்டாம் சீன-சப்பானியப் போர்: கார்பின், மஞ்சூரியா, சப்பானிடம் வீழ்ந்தன.

  2. 1936

    முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் உருவாக்கப்பட்டது.

  3. 1938

    இட்லர் தன்னை செருமனியின் இராணுவ உயர் தளபதியாக அறிவித்தார்.

  4. 1943

    இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.

  5. 1945

    இரண்டாம் உலகப் போர்: "மூன்று பெரும் தலைவர்கள்" (சர்ச்சில், ரூசவெல்ட், ஸ்டாலின்) உக்ரேனில் கிரிமியாவில் நடந்த யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.

  6. 1948

    இலங்கை பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் இலங்கை மேலாட்சி என்ற பெயரில் விடுதலை அடைந்தது.

  7. 1957

    இலங்கை விடுதலை நாளை திருகோணமலையில் துக்க நாளாக அனுட்டித்த தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் திருமலை நடராசன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

  8. 1961

    அங்கோலா விடுதலைப் போர் ஆரம்பமானது.

  9. 1966

    நிப்போன் ஏர்வேய்சு விமானம் டோக்கியோ வளைகுடாவில் வீழ்ந்ததில் 133 பேர் உயிரிழந்தனர்.

  10. 1969

    பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.

  11. 1974

    ஐரியக் குடியரசுப் படை போராளிகள் இங்கிலாந்து யோர்க்சயர் நகரில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றைக் குண்டு வைத்துத் தகர்த்ததில் ஒன்பது இராணுவத்தினரும் 3 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

  12. 1975

    சீனாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,041 பேர் உயிரிழந்தனர்.

  13. 1976

    குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.

  14. 1977

    சிகாகோவில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 11 பேர் உயிரிழந்தனர், 180 பேர் காயமடைந்தனர்.

  15. 1978

    இலங்கையின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.

  16. 1992

    ஊகோ சாவெசு தலைமையில் வெனிசுவேலாவில் அரசுத்தலைவர் கார்லோசு பேரெசுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

  17. 1997

    இசுரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் உயிரிழந்தனர்.

  18. 1998

    ஆப்கானித்தானில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,323 பேர் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    யுகோசுலாவியா அதிகாரபூர்வமாக செர்பியாவும் மொண்டெனேகுரோவும் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

  2. 2004

    மார்க் சக்கர்பெர்க் முகநூல் என்ற சமூக வலைத்தளத்தை ஆரம்பித்தார்.

  3. 2007

    ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் உருசிய-இந்திய "பிரமாசு" ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

  4. 2007

    வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

  5. 2015

    டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் தாய்வான் தலைநகர் தாய்பெய்யில் கீலுங் ஆற்றில் விழுந்ததில் 43 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 19

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 4 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.