Skip to content

Popular

February 13 வெள்ளி

On this day · February 13

வரலாற்றில் பெப்ரவரி 13

பெப்ரவரி 13 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 14 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2

பெப்ரவரி 13 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

10ஆம் நூற்றாண்டு

  1. 962

    உரோமின் ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது.

14ஆம் நூற்றாண்டு

  1. 1322

    இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1542

    முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

  2. 1575

    பிரான்சின் மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1633

    திரிபுக் கொள்கை விசாரணையை எதிர்கொள்ள கலீலியோ கலிலி உரோம் நகர் வந்தார்.

  2. 1689

    வில்லியம், மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

  3. 1692

    கிளென்கோ படுகொலைகள்: இசுக்காட்லாந்தில் கிளென் கோ என்ற இடத்தில் ஏறத்தாழ 80 டொனால்டு வம்சத்தினர் புதிய மன்னர் வில்லியமுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்ததால் படுகொலை செய்யப்பட்டனர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1739

    ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷாவின் படையினர் இந்தியாவின் முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தனர்.

  2. 1755

    சாவகத்தின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1880

    தாமசு ஆல்வா எடிசன் எடிசன் விளைவை அவதானித்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1913

    13வது தலாய் லாமா திபெத்திய விடுதலையை அறிவித்தார்.

  2. 1914

    பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.

  3. 1931

    பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு தனது தலைநகரை கொல்கத்தாவில் இருந்து புது தில்லிக்கு நகர்த்தியது.

  4. 1934

    சோவியத் நீராவிக்கப்பல் செலியூன்ஸ்கின் 111 பேருடன் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

  5. 1945

    இரண்டாம் உலகப் போர்: புடாபெஸ்ட் நகர முற்றுகை முடிவுக்கு வந்தது. செருமனிய, அங்கேரிப் படைகள் செஞ்சேனையிடம் சரணடைந்தன.

  6. 1960

    பிரான்சு வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4வது நாடானது.

  7. 1971

    வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.

  8. 1975

    நியூயார்க் உலக வணிக மையத்தில் தீ பரவியது.

  9. 1978

    சிட்னியில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.

  10. 1981

    அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் லூயிவில் நகரில் இடம்பெற்ற கழிவுநீர்க் குழாய் வெடிப்பில் இரண்டு மைல் நீள வீதிகள் சேதமடைந்தன.

  11. 1983

    இத்தாலி, துரின் நகரில் திரையரங்கு ஒன்று தீப்பற்றியதில் 64 பேர் உயிரிழந்தனர்.

  12. 1984

    சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக கான்ஸ்டன்டீன் செர்னென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  13. 1985

    இலங்கையில் கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

  14. 1990

    செருமானிய மீளிணைவு: இரண்டு செருமனிகளையும் ஒன்றினைக்க இரண்டு-கட்டத் திட்டத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டது.

  15. 1991

    வளைகுடாப் போர்: பகுதாது நகரில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது கூட்டு நாடுகளின் குண்டுகள் வீழ்ந்ததில் 400 ஈராக்கியப் பொதுமக்கள் கொலலப்பட்டனர்.

  16. 1996

    நேப்பாளத்தில் மாவோயிசப் பொதுவுடமைவாதிகளால் நேபாள மக்கள் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    எல் சல்வடோரில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.

  2. 2004

    அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

  3. 2008

    ஆத்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக ஆத்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.

  4. 2010

    இந்தியாவில் புனே நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டு, 60 பேர் காயமடைந்தனர்.

  5. 2017

    தென்கொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் சோங்-நம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.