Skip to content

Popular

February 16 திங்கள்

On this day · February 16

வரலாற்றில் பெப்ரவரி 16

பெப்ரவரி 16 அன்று நிகழ்ந்த 53 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 13 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 1

பெப்ரவரி 16 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

13ஆம் நூற்றாண்டு

  1. 1249

    பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1630

    என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின.

  2. 1646

    இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1742

    வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  2. 1796

    கொழும்பு நகரமும், இலங்கையின் கடல்சார் மாகாணங்களும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1838

    தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.

  2. 1862

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: யுலிசீஸ் கிராண்ட் டென்னிசியில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1918

    லித்துவேனியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  2. 1923

    ஹாவர்ட் கார்ட்டர் பண்டைய எகிப்திய மன்னர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.

  3. 1934

    ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

  4. 1937

    அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

  5. 1940

    இரண்டாம் உலகப் போர்: ஆல்ட்மார்க் சம்பவம்: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.

  6. 1943

    இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் கார்கீவ் நகரினுள் நுழைந்தன.

  7. 1945

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.

  8. 1945

    இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் தமிழருக்கு சம உரிமைக்கான 'ஐம்பதுக்கு ஐம்பது' கோரிக்கை தமிழ்க் காங்கிரசு கட்சியால் முன்வைக்கப்பட்டது.

  9. 1959

    சனவரி 1 இல் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.

  10. 1962

    மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய வடகடல் வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.

  11. 1978

    முதலாவது கணினி அறிக்கைப் பலகை சிகாகோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  12. 1983

    ஆத்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.

  13. 1985

    இசுபுல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

  14. 1986

    சோவியத் கப்பல் மிக்கைல் லெர்மொந்தோவ் நியூசிலாந்தில் மூழ்கியது.

  15. 1988

    சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

  16. 1991

    நிக்கராகுவாவின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு மனாகுவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  17. 1996

    சிகாகோ சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்று மேரிலாந்தில் இன்னுமொரு தொடருந்துடன் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

  18. 1998

    தாய்வானில் சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

  2. 2007

    2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

  3. 2013

    பாக்கித்தான் குவெட்டா நகரில் சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.

  4. 2014

    நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 13

இறப்புகள்

Deaths · 10

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.