Skip to content

Popular

February 23 திங்கள்

On this day · February 23

வரலாற்றில் பெப்ரவரி 23

பெப்ரவரி 23 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 12 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 1

பெப்ரவரி 23 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

6ஆம் நூற்றாண்டு

  1. 532

    பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1455

    முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1820

    பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.

  2. 1836

    டெக்சாசுப் புரட்சி: அலாமா போருக்கு முன்னோடியான அலாமா முற்றுகை அமெரிக்காவில் சான் அந்தோனியோ நகரில் ஆரம்பமானது.

  3. 1847

    மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் சக்கரி தைலர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.

  4. 1854

    ஆரஞ்சு இராச்சியத்தின் அதிகாரபூர்வமான விடுதலை அறிவிக்கப்பட்டது.

  5. 1861

    அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் பால்ட்டிமோர், மேரிலாந்து பால்ட்டிமோர் நகரில் நடந்த படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன், டி. சி.க்கு இரகசியமாக வந்திறங்கினார்.

  6. 1870

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.

  7. 1885

    சீன-பிரெஞ்சுப் போர்: பிரெஞ்சு இராணுவம் வியட்நாமில் டொங் டாங் சமரில் முக்கிய வெற்றியைப் பெற்றது.

  8. 1886

    சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை அலுமினியத்தை உருவாக்கினார்.

  9. 1887

    பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1903

    கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.

  2. 1904

    ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பெற்றுக் கொண்டது.

  3. 1905

    சிகாகோவில் ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

  4. 1917

    சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமானது. (கிரெகொரியின் நாட்காட்டியில் மார்ச் 8).

  5. 1927

    செருமானிய கோட்பாட்டு இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.

  6. 1934

    மூன்றாம் லியோபோல்ட் பெல்சியத்தின் மன்னராக முடிசூடினார்.

  7. 1941

    புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டது.

  8. 1942

    இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிகள் கலிபோர்னியாவின் சான்டா பார்பரா கரையோரப் பகுதிகளில் எரிகணைகளை ஏவின.

  9. 1943

    அயர்லாந்தில் கவன் மாவட்டத்தில் புனித யோசேப்பு அனாதை மடம் தீப்பற்றியதில் 35 சிறுவர்கள் உயிரிழ்ந்தனர்.

  10. 1944

    சோவியத் ஒன்றியம் செச்சினிய மற்றும் இங்குசேத்திய மக்களை வடக்கு காக்கேசியாவில் இருந்து மத்திய ஆசியாவுக்குக் கட்டாயமாக நாடு கடத்த ஆரம்பித்தது.

  11. 1945

    இரண்டாம் உலகப் போர்: போசுனான் நகரம் சோவியத், போலந்து படையினரால் விடுவிக்கப்பட்டது.

  12. 1945

    இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் சப்பானியரிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

  13. 1947

    சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

  14. 1954

    போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

  15. 1966

    சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

  16. 1987

    சுப்பர்நோவா "1987ஏ" தென்பட்டது.

  17. 1991

    தாய்லாந்தில் இராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  18. 1997

    உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

  19. 1998

    மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் உயிரிழந்தனர்.

  20. 1999

    குர்தியக் கிளர்ச்ச்சித் தலைவர் அப்துல்லா ஓசுலான் துருக்கியின் அங்காரா நகரில் தேச்த்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.

  2. 2008

    அமெரிக்க வான்படையின் பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் குவாமில் வீழ்ந்து நொறுங்கியது.

பிறப்புகள்

Births · 12

இறப்புகள்

Deaths · 10

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.