Skip to content

Popular

February 6 வெள்ளி

On this day · February 6

வரலாற்றில் பெப்ரவரி 6

பெப்ரவரி 6 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 26 பிறப்புகள் · 18 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1

பெப்ரவரி 6 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 26

1ஆம் நூற்றாண்டு

  1. 60

    கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1658

    சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன.

  2. 1685

    இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1788

    மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது.

  2. 1792

    மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1806

    கரிபியனில் நடந்த சான் டொமிங்கோ சமரில் பிரித்தானியக் கடற்படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.

  2. 1819

    சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.

  3. 1820

    முதல் தொகுதி 86 ஆபிரிக்க அமெரிக்கர்கள் லைபீரியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக நியூயார்க்கில் இருந்து புறப்பட்டனர்.

  4. 1840

    நியூசிலாந்தில் வைத்தாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.

  5. 1851

    ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியது. 12 பேர் உயிரிழந்தனர்.

  6. 1863

    இலங்காபிமானி (Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் டபிள்யூ. சி. கதிரவேற்பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.

  7. 1899

    எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை (1898) அமெரிக்க மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  8. 1900

    நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1918

    30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

  2. 1951

    கனடிய இராணுவம் கொரியப் போரில் இறங்கியது.

  3. 1951

    அமெரிக்காம், நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் உயிரிழந்தனர், 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

  4. 1952

    ஆறாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு அரசியானார்.

  5. 1958

    செருமனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் உயிரிழந்தனர்.

  6. 1959

    டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி தொகுசுற்றுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.

  7. 1959

    கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

  8. 1978

    அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியை வரலாறு காணாத இடம்பெற்ற பனிப்புயல் தாக்கியது.

  9. 1989

    போலந்தில் ஆரம்பமான வட்டமேசை மாநாட்டில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கம்யூனிச ஆட்சிகளைக் கவிழ்ப்பது குறிந்து ஆராயப்பட்டது.

  10. 1996

    அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 189 பேரும் உயிரிழந்தனர்.

  11. 2000

    உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2016

    தாய்வான் நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 6 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.