Skip to content

Popular

February 15 ஞாயிறு

On this day · February 15

வரலாற்றில் பெப்ரவரி 15

பெப்ரவரி 15 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 15 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 3

பெப்ரவரி 15 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

6ஆம் நூற்றாண்டு

  1. 590

    பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான்.

8ஆம் நூற்றாண்டு

  1. 706

    பைசாந்தியப் பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியோசு ஆகியோரைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1214

    ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1493

    கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1637

    புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார்.

  2. 1690

    உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஆப்சுபர்கு படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு மோல்தாவியா ஆதரவளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1796

    டச்சுக்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.

  2. 1798

    முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1865

    இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாரசீக வளைகுடா ஊடான தந்தி சேவை ஆரம்பமானது.

  2. 1898

    ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1909

    மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.

  2. 1920

    யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.

  3. 1923

    கிரேக்கம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடானது.

  4. 1933

    மயாமியில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிராங்க்ளின் ரூசவெல்ட்டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக சிகாகோ நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார்.

  5. 1942

    இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் போர்: சப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆத்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் மோண்ட்டி கசீனோ சண்டை ஆரம்பமானது.

  7. 1946

    எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது.

  8. 1950

    சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

  9. 1952

    ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் உடல் வின்ட்சர் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.

  10. 1961

    பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட செய்த அனைத்து 73 பேரும் உயிரிழந்தனர்.

  11. 1972

    ஐந்தாவது தடவையாக எக்குவடோர் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த ஒசே மரியா இபாரா இராணுவப் புரட்சியில் பதவி இழந்தார்.

  12. 1982

    நியூபவுண்ட்லாந்து தீவில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 84 தொழிலாலர்கள் உயிரிழந்தனர்.

  13. 1989

    ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானித்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

  14. 1991

    செக்கோசிலோவாக்கியா, அங்கேரி, போலந்து ஆகிய கம்யூனிச நாடுகள் திறந்த-சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுக்க உடன்பாடு கண்டன.

  15. 1994

    உருசியா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.

  16. 1996

    சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    முழுமையான மனித மரபணுத்தொகை நேச்சர் இதழில் வெளியானது.

  2. 2003

    ஈராக்கியப் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் 600 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. 8 முதல் 30 மில்லியன் மக்கள் வரை இதில் பங்குபற்றினர்.

  3. 2010

    பெல்சியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர், 171 பேர் காயமடைந்தனர்.

  4. 2012

    ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர்.

  5. 2013

    உருசியாவில் எரிவெள்ளி ஒன்று வெடித்ததில், 1,500 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.