Skip to content

Popular

February 26 வியாழன்

On this day · February 26

வரலாற்றில் பெப்ரவரி 26

பெப்ரவரி 26 அன்று நிகழ்ந்த 53 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 24 பிறப்புகள் · 16 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 1

பெப்ரவரி 26 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 24

4ஆம் நூற்றாண்டு

  1. 364

    முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1233

    மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1606

    இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.

  2. 1616

    பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார்.

  3. 1658

    வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1748

    ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

  2. 1794

    கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1815

    இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார்.

  2. 1841

    இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.

  3. 1876

    யப்பானியக் குடிமக்களுக்கு கொரியாவில் யப்பானிய வணிக வசதிகளுக்காக மூன்று துறைமுகங்களை அமைக்க, யப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1909

    கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.

  2. 1935

    இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது.

  3. 1936

    சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

  4. 1952

    ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.

  5. 1960

    நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானம் அயர்லாந்தில் இடுகாடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 52 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.

  6. 1971

    ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.

  7. 1980

    எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தின.

  8. 1984

    பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.

  9. 1991

    வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார்.

  10. 1992

    நகோர்னோ-கரபாக் போர்: ஆர்மீனிய இராணுவத்தினர் அசர்பைசானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

  11. 1993

    நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.

  2. 2013

    வெப்பக் காற்று ஊதுபை ஒன்று எகிப்தில் வீழ்ந்து வெடித்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.

  3. 2018

    பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்

பிறப்புகள்

Births · 16

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · பெப்ரவரி

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.