Skip to content

Popular

October 9 வெள்ளி

On this day · October 9

வரலாற்றில் அக்டோபர் 9

அக்டோபர் 9 அன்று நிகழ்ந்த 81 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 42 பிறப்புகள் · 19 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 4

அக்டோபர் 9 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 42

8ஆம் நூற்றாண்டு

  1. 768

    முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1238

    முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1446

    அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1582

    கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

  2. 1594

    தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1604

    சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது.

  2. 1635

    தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1708

    உருசியாவின் முதலாம் பேதுரு லெசுனயா சமரில் சுவீடனைத் தோற்கடித்தார்.

  2. 1740

    டச்சுக் குடியேறிகளும் பல்வேறு அடிமைக் குழுக்களும் பட்டாவியாவில் உள்ளூர் சீன இனத்தவரைக் கொலை செய்ய ஆரம்பித்தனர். சாவகத் தீவில் இரண்டாண்டுகள் நீடித்த போரில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

  3. 1760

    ஏழாண்டுப் போர்: உருசியப் படைகள் பெர்லின் நகரைக் கைப்பற்றின.

  4. 1790

    அல்சீரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையினால் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

  5. 1799

    லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1806

    புருசியா பிரான்சு மீது போர் தொடுத்தது.

  2. 1812

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஈரீ ஏரியில் இடம்பெற்ற கடற் சமரில் அமெரிக்கப் படையினர் இரண்டு பிரித்தானியக் கப்பல்களைக் கைப்பற்றினர்.

  3. 1820

    உவயாகில் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  4. 1824

    கோஸ்ட்டா ரிக்காவில் அடிமை முறை இல்லாதொழிக்கப்பட்டது.

  5. 1831

    கிரேக்கத்தின் முதலாவது அரசுத்தலைவர் இயோனிசு கப்பொதிசுத்திரியாசு படுகொலை செய்யப்பட்டார்.

  6. 1835

    கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

  7. 1847

    செயிண்ட்-பார்த்தலெமியில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

  8. 1854

    உருசியாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்சு, துருக்கியப் படைகள் ஆரம்பித்தன.

  9. 1871

    மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

  10. 1874

    அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அமைக்கப்பட்டது.

  11. 1900

    குக் தீவுகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1910

    மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.

  2. 1914

    முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரம் செருமனியிடம் வீழ்ந்தது.

  3. 1934

    யுகோசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

  4. 1940

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியச் சண்டை: செருமனியின் லூப்டுவாபே படைகள் இலண்டன் புனித பவுல் பேராலயம் மீது இரவு நேரத்தில் குண்டுகள் வீசின.

  5. 1941

    பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார்.

  6. 1942

    வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆத்திரேலியாவின் சுயாட்சியை அங்கீகரித்தது.

  7. 1962

    உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது.

  8. 1963

    வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

  9. 1966

    வியட்நாம் போர்: தென் வியட்நாமில் பின் தாய் நகரில் தென் கொரியப் படைகள் நடத்திய தாக்குதலில் 168 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

  10. 1967

    சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  11. 1970

    கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.

  12. 1980

    திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் தலாய் லாமாவைச் சந்தித்தார்.

  13. 1981

    பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.

  14. 1983

    ரங்கூனில் தென் கொரிய அரசுத்தலைவர் சுன் டூ-குவான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

  15. 1987

    யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

  2. 2004

    ஆப்கானித்தானில் முதற்தடவையாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

  3. 2006

    வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

  4. 2012

    பாக்கித்தானிய தாலிபான்கள் மலாலா யூசப்சையியைப் படுகொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

பிறப்புகள்

Births · 19

இறப்புகள்

Deaths · 16

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.