Skip to content

Popular

October 28 புதன்

On this day · October 28

வரலாற்றில் அக்டோபர் 28

அக்டோபர் 28 அன்று நிகழ்ந்த 59 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 16 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 1

அக்டோபர் 28 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

1ஆம் நூற்றாண்டு

  1. 97

    உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்.

4ஆம் நூற்றாண்டு

  1. 306

    மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

  2. 312

    மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார்.

5ஆம் நூற்றாண்டு

  1. 456

    போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1420

    பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது.

  2. 1449

    முதலாம் கிறித்தியான் டென்மார்க்கின் அரசராக முடிசூடினார்.

  3. 1492

    கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தின்போது கியூபாவைக் கண்டுபிடித்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1636

    மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் முதலாவது கல்லூரியை நிறுவுவதற்கான வாக்கெடுப்பை அடுத்து அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகம் என இன்று அழைக்கப்படும் கல்லூரி நிறுவப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1707

    சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகிய இடங்களில் 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

  2. 1775

    அமெரிக்கப் புரட்சிப் போர்: பாஸ்டனில் இருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் பிரித்தானியச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1834

    மேற்கு ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரித்தானியக் குடியேறிகளினால் 30 நூங்கார் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

  2. 1886

    நியூயார்க் துறைமுகத்தில் விடுதலைச் சிலையை அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.

  3. 1891

    சப்பானில் நோபி சமவெளியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7,000 இற்கும் அதிகமானோர் உயிரிழ்ந்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1904

    பனாமாவும் உருகுவையும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.

  2. 1918

    முதலாம் உலகப் போர்: முன்னூறு ஆண்டுகள் ஆக்கிரமிப்பை அடுத்து, ஆத்திரியா-அங்கேரியில் இருந்து செக்கோசிலோவாக்கியா விடுதலையை அறிவித்தது.

  3. 1918

    புதிய போலந்து அரசு மேற்கு கலீசியாவில் உருவானதை அடுத்து, போலந்து-உக்ரைனியப் போர் ஆரம்பமானது.

  4. 1922

    பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.

  5. 1940

    இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் காலக்கெடுவை கிரேக்கம் ஏற்க மறுத்ததை அடுத்து, கிரேக்க-இத்தாலியப் போர் ஆரம்பமானது. இத்தாலி கிரேக்கத்தை அல்பேனியா ஊடாக ஊடுருவியது.

  6. 1942

    கனடா ஊடான அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

  7. 1949

    ஏர் பிரான்சு வானூர்தி போர்த்துகலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 48 பேரும் உயிரிழந்தனர்.

  8. 1956

    எல்விஸ் பிரெஸ்லி தேசியத் தொலைக்காட்சியில் போலியோ தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.

  9. 1958

    23-ம் யோவான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  10. 1962

    கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.

  11. 1965

    இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் "கிறித்தவமல்லாத சமயங்களுடனான திருச்சபையின் தொடர்புகள் தொடர்பான அறிவிப்பை" திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார். இதன்படி, இயேசு கிறித்துவின் இறப்புக்கு யூதர்கள் காரணம் என்ற 760-ஆண்டுக்கால அறிவிப்பு மீளப்பெறப்பட்டது.

  12. 1990

    ஜோர்ஜியாவில் வரலாற்றில் முதற்தடவையாக பல-கட்சி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.

  13. 1995

    அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் ஏற்பட்ட தீவிபத்தில் 229 பேர் உயிரிழந்தனர், 265 பேர் காயமடைந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.

  2. 2006

    1930களில் சோவியத் போல்செவிக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிக்கிவீனா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.

  3. 2009

    பாக்கித்தான், பெசாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டனர்.

  4. 2014

    நாசாவின் சிக்னசு ஆளில்லா விண்கலம் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டு சில நிமிட நேரத்தில் வெடித்துச் சிதறியது.

பிறப்புகள்

Births · 16

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.