Skip to content

Popular

October 30 வெள்ளி

On this day · October 30

வரலாற்றில் அக்டோபர் 30

அக்டோபர் 30 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 17 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 2

அக்டோபர் 30 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

7ஆம் நூற்றாண்டு

  1. 637

    அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது.

8ஆம் நூற்றாண்டு

  1. 758

    குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1270

    சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன.

15ஆம் நூற்றாண்டு

  1. 1485

    ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1502

    வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1657

    எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1817

    வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார்.

  2. 1831

    ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டார்.

  3. 1863

    டென்மார்க்கு இளவரசர் வில்லெம் முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் கிரேக்க மன்னராக முடிசூடும் நோக்குடன் ஏதென்சை சென்றடைந்தார்.

  4. 1864

    தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலேனா குடியேற்ற நாடு நிறுவப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார். (இது யூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 17 இல் இடம்பெற்றது).

  2. 1918

    உதுமானியப் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

  3. 1920

    அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.

  4. 1925

    ஜான் லோகி பைர்டு பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.

  5. 1941

    இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதிய கடன்-குத்தகை ஒப்பந்தத்தில் வழங்க பிராங்க்ளின் ரூசவெல்ட் ஒப்புதல் வழங்கினார்.

  6. 1941

    மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.

  7. 1945

    இந்தியா ஐநாவில் இணைந்தது.

  8. 1947

    உலக வணிக அமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாக கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் நிறுவப்பட்டது.

  9. 1953

    பனிப்போர்: பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உத்தரவில் அமெரிக்கத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கையெழுத்திட்டார்.

  10. 1960

    முதலாவது வெற்றிகரமான சிறுநீரகக் கொடை ஐக்கிய இராச்சியத்தில் அளிக்கப்பட்டது.

  11. 1961

    சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள சார் வெடிகுண்டு என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.

  12. 1961

    ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

  13. 1964

    இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

  14. 1970

    வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

  15. 1973

    ஐரோப்பாவையும் ஆசியாவையும் பொசுபோரசு நீரிணைக்கு மேலாக இணைக்கும் பொசுபோரசு பாலம் துருக்கியின் இசுதான்புல் நகரில் அமைக்கப்பட்டது.

  16. 1983

    ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் அர்கெந்தீனாவில் முதற்தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது.

  17. 1985

    சாலஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.

  18. 1993

    வட அயர்லாந்து, கிரேசுடீன் என்ற இடத்தில் ஆலோவீன் விழா ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

  19. 1995

    கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர், 15 பேர் காயமடைந்தனர்.

  2. 2006

    ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.

  3. 2014

    பாலத்தீன நாட்டை சுவீடன் அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும்.

  4. 2015

    உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர், 147 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 17

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 30 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.