Skip to content

Popular

October 4 ஞாயிறு

On this day · October 4

வரலாற்றில் அக்டோபர் 4

அக்டோபர் 4 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 22 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 3

அக்டோபர் 4 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 28

1ஆம் நூற்றாண்டு

  1. 23

    சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1227

    மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1302

    பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1511

    பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின.

  2. 1537

    மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.

  3. 1582

    கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1636

    முப்பதாண்டுப் போர்: சுவீடன் இராணுவம் புனித உரோமைப் பேரரசு, சாக்சனி இராணுவத்தை விட்சுடொக் சமரில் தோற்கடித்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1777

    அமெரிக்கப் புரட்சிப் போர்: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜார்ஜ் வாசிங்டனின் படைகளை வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1824

    மெக்சிகோ குடியரசு ஆகியது.

  2. 1830

    பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.

  3. 1853

    கிரிமியப் போர்: உதுமானியப் பேரரசு உருசியா மீது போர் தொடுத்தது.

  4. 1883

    ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் விரைவுத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1918

    அமெரிக்காவில் நியூ செர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

  2. 1943

    இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது.

  3. 1957

    பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள இனவாதிகள் கண்டிக்கு நடைப்பயணம் நடத்தினர்.

  4. 1957

    புவியைச் சுற்றி வந்த முதலாவது செயற்கைக்கோள் என்ற சாதனையை சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் 1 ஏற்படுத்தியது.

  5. 1959

    லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.

  6. 1960

    அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் விமானம் ஒன்று பறவையினால் தாக்கப்பட்டதை அடுத்து வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 72 பேரில் 62 பேர் உயிரிழந்தனர்.

  7. 1963

    கியூபா, எயிட்டி ஆகிய நாடுகளைத் சூறாவளி புளோரா தாக்கியதில் 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

  8. 1966

    பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.

  9. 1985

    கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.

  10. 1992

    மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

  11. 1992

    ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.

  12. 1993

    உருசியத் தலைவர் போரிசு யெல்ட்சினுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தாங்கிகள் நாடாளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசின.

  13. 1997

    ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங் கடலில் வீழ்ந்து 78 பேர் உயிரிழந்தனர்.

  2. 2003

    இசுரேலில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 2006

    விக்கிலீக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

Births · 22

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 4 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.