Skip to content

Popular

October 17 சனி

On this day · October 17

வரலாற்றில் அக்டோபர் 17

அக்டோபர் 17 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 21 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 3

அக்டோபர் 17 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

11ஆம் நூற்றாண்டு

  1. 1091

    இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது.

14ஆம் நூற்றாண்டு

  1. 1346

    இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1448

    கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1534

    திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் சுவிங்கிளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

17ஆம் நூற்றாண்டு

  1. 1604

    செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார்.

  2. 1610

    பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார்.

  3. 1660

    இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.

  4. 1662

    இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னன் டன்கிர்க் நகரை 40,000 பவுண்களுக்கு பிரான்சுக்கு விற்றார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1800

    இடச்சு குடியேற்ற நாடான குராசோ பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் வந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1806

    எயித்தியப் புரட்சியின் முன்னாள் தலைவர் பேரரசர் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார்.

  2. 1861

    ஆத்திரேலியா குயின்சுலாந்தில் தொல்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1907

    மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.

  2. 1912

    முதலாம் பால்க்கன் போர்: பல்காரியா, கிரேக்கம், செர்பியா ஆகியன மொண்டெனேகுரோவுடன் இணைந்து உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தன.

  3. 1933

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாட்சி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

  4. 1941

    இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் கிரேக்கத்தின் செரெசு என்ற கிராமத்தில் அனைத்து ஆண்களையும் படுகொலை செய்தனர்.

  5. 1941

    இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.

  6. 1943

    சயாம் மரண இரயில்பாதை (பர்மா-தாய்லாந்து தொடருந்து சேவை) ஆரம்பிக்கப்பட்டது.

  7. 1956

    முதலாவது வணிகநோக்கு அணுக்கரு உலையை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி இங்கிலாந்து, செலாஃபீல்டு என்ற இடத்தில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

  8. 1961

    பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  9. 1965

    நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.

  10. 1966

    நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.

  11. 1970

    மொண்ட்ரியால்: கியூபெக் மாநிலத்தின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான பியேர் லாப்போர்ட்டே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  12. 1973

    எகிப்துக்கு எதிராக இசுரேல் நடத்திய போரில் இசுரேலுக்கு உதவிய மேற்குலக நாடுகளுக்கு எதிராக ஓப்பெக் அமைத்து எண்ணெய்த் தடையை அறிவித்தது.

  13. 1979

    அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

  14. 1989

    சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 6.9 நிலநடுக்கம் தாக்கியதில் 63 பேர் உயிரிழந்தனர்.

  15. 1989

    அமைதிப் புரட்சி: கிழக்கு செருமனியின் அரசுத்தலைவர் எரிக் ஒனெக்கரை செருமன் சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்ற கட்சியின் உயர்பீடம் முடிவு செய்தது.

  16. 1995

    யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.

  17. 1998

    நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    இசுரேலின் சுற்றுலாத்துறை அமைச்சர் ர்டெகாவாம் சீவி தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

  2. 2003

    தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி என்ற பெயரைப் பெற்றது.

  3. 2006

    ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.

  4. 2018

    கனடாவில் பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமாக்கப்பட்டது.

  5. 2018

    கிரிமியாவில் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் 18-அகவை மாணவன் ஒருவன் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டு, 70 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 21

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.