Skip to content

Popular

October 20 செவ்வாய்

On this day · October 20

வரலாற்றில் அக்டோபர் 20

அக்டோபர் 20 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 23 பிறப்புகள் · 30 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 3

அக்டோபர் 20 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 23

18ஆம் நூற்றாண்டு

  1. 1740

    மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1803

    அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.

  2. 1818

    அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  3. 1827

    துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

  4. 1883

    பசிபிக் போரில் பெருவின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. பெருவின் தரப்பக்கா மாகாணம் சிலிக்கு வழங்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1904

    சிலியும் பொலிவியாவும் தமது எல்லைகளை நிர்ணயிக்கும் அமைதி உடன்பாட்டை ஏற்றுக் கொண்டன.

  2. 1941

    கிறகுஜேவாச் படுகொலைகள்: செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்சி செருமனியரால் கொல்லப்பட்டனர்.

  3. 1944

    இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை செருமனியிடமிருந்து மீட்டது.

  4. 1944

    கிளீவ்லாந்து நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பேர் கொல்லப்பட்டனர்.

  5. 1947

    பாக்கித்தானும், ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவை ஏற்படுத்தின.

  6. 1952

    கென்யாவில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

  7. 1961

    சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது.

  8. 1962

    சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோடு வரையான இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இந்திய சீனப் போர் ஆரம்பிக்க இது வழிவகுத்தது.

  9. 1968

    அமெரிக்காவின் முன்னாள் முதலாவது சீமாட்டி ஜாக்குலின் கென்னடி கிரேக்கத் தொழிலதிபர் அரிசுடாட்டில் ஒனாசிசு என்பவரைத் திருமணம் புரிந்தார்.

  10. 1973

    இரண்டாம் எலிசபெத் மகாராணி சிட்னி ஒப்பேரா மாளிகையைத் திறந்து வைத்தார்.

  11. 1976

    மிசிசிப்பி ஆற்றில் ஜார்ஜ் பிரின்சு என்ற பயணிகள் கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் இறந்தனர். 18 பேர் மட்டும் தப்பினர்.

  12. 1982

    மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் ஸ்பர்த்தாக், மற்றும் டச்சு ஆர்லெம் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு கால்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் உயிரிழந்தனர்.

  13. 1982

    இலங்கையில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. ஜே. ஆர். ஜெயவர்தனா 52.1% வாக்குகள் பெற்று முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவரானார்.

  14. 1991

    இந்தியாவின் உத்தரகாசியில் இடம்பெற்ற 6.8 அளவு நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.

  15. 1995

    கொழும்பு கொலன்னாவை பெற்றோலியக் கூட்டுத்தாபன எண்ணெய்த் தாங்கிகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பெரும் சேதம் ஏற்பட்டது, 21 பேர் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.

  2. 2004

    முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.

  3. 2011

    லிபிய உள்நாட்டுப் போர்: தேசிய இடைக்காலப் பேரவை போராளிகள் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அரசுத்தலைவர் முஅம்மர் அல் கதாஃபியை அவரது சொந்த நகரில் கைப்பற்றிப் படுகொலை செய்தனர்.

பிறப்புகள்

Births · 30

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · அக்டோபர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 20 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.